.
.

.

Latest Update

ஆல்பம் பாடலை G.V.பிரகாஷ் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் இளம் குழு


திரைபடத்திற்கு முன்னோட்டமாக “எனக்கெனவே” ஆல்பம் பாடலை G.V.பிரகாஷ் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் இளம் குழு.

திரைப்பட அனுபவம் வாய்ந்த குழு பிரபலங்களோடு இனைந்து தயாரித்துள்ள “ எனக்கெனவே “ வீடியோ சாங் ஆல்பம் விரைவில் வெளியாகவுள்ளது !

தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படதுறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இனைந்து “ எனக்கெனவே “ என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன் சேகர். இவர் தான் G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த “ ப்ருஸ் லீ “ திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான்தான் கொப்பன் டா “ சிங்கள் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இயக்குநர் M.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் / பாடகர் / நடிகர் என்று பன்முகம் கொண்ட G.V. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். கபாலி , பைரவா போன்ற சூப்பர் ஸ்டார் படங்களின் படத்தொகுப்பை கவனித்த தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். ஒளிப்பதிவு :- சுந்தர் ராகவன் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜின் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் , நடனம் :- அசார் , கலை :-மதன் , விளம்பர வடிவமைப்பு :- மணிகண்டன்.

அழகிய காதல் பாடலான எனக்கெனவே – வில் நாயகனாக ராகேஷ் ராஜன் , நாயகியாக ஸ்முருத்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெட்ராஸ் டெக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெகதீசன் R.V , நவநீத பாபு , நரேன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் இப்பாடலின் First Look ப்ரோமோ வெளியாகவுள்ளது. இதைதொடர்ந்து முழு பாடலும் வெளியாகும். பாடலை உருவாக்கியுள்ள இதே குழு ஒன்றாக இனைந்து அடுத்து திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles