.
.

.

Latest Update

இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்!


இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்!

இப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,
நடனம் தீனா மற்றும் விஜி.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர்.

இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்து. ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles