.
.

.

Latest Update

இயக்குனர் மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு


காலங்கள் மாறிக்கொண்டிருகிறது. திரையிலும் சரி, வாழ்விலும் சரி, பெண்களுக்குரிய அங்கீகாரமறுப்பு என்பது கடந்த காலமாகிவிட்டது.

இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தான் எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெண்களை மையமாகக் கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற இவ்வேளையில், ஒரு அதிரடி – மர்மம் – திரில்லர் கட்டமைப்பிலான பிரியதர்சினியின் இப்புதிய படைப்பு, ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர தூண்டியுள்ளது என்பது வரவேற்புக்குரியது. காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட இத்திரைப்படமொரு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளோம்.

கதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்ளிடம் இத்திரைப்பட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.
பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கதாபாத்திரங்களும், கதையின் அமைப்பும், திரைக்கதையின் அணுகுமுறையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட இருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புகழ் பாலாஜி ரங்கா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசை ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் C S. கலைக்கு கபாலி புகழ் T ராமலிங்கம் பொறுப்பேற்கிறார்

முக்கியத்துவம் வாய்ந்த சண்டைகாட்சி அமைப்பு குழுவை தேர்தெடுப்பதில் இயக்குனர் கவனமாக மேற்கொண்டு வருகிறார்.

பேப்பர்டேல் பிக்சர்ஸ் முக்கியமானவர்கள் இருவரை அறிமுகபடுத்துவதில் பெருமை கொள்கிறது. படத்தொகுப்பாளர் இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன். முதுபெரும் படத்தொகுப்பாளர் KL பிரவீன் உதவியாளரான இளையராஜா, கபாலி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமிக்கவர். ஒலிநுட்ப பொறியாளர் ஆனந்த் ஷ்ரவன் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவமும், ஒலி உற்பத்தி மற்றும் இசை நுட்பவியல் குறித்த ஆளுமையும் நிறைந்தவர்.

“இது ஒரு திட்டமிட்ட, உணர்வுபூர்வமான முடிவல்ல. ஒரு அதிரடியான, மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்த கதையின் மையம் ஒரு பெண் என்பது முடிவான பிறகு, வரலக்ஷ்மியே முதலும் இறுதியுமான தேர்வாக இருந்தார். வரலக்ஷ்மி தன்னம்பிக்கையும், கவனமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நடிகை. இத்திரைப்படம் அவரிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர்ந்து, ஒரு புதிய பரிமாணத்தில் அவரை நிலைநிறுத்தும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். ஒரு அருமையான, திறமையான குழு அமைந்தது என் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். ஒரு பெண் தொழிலதிபர், சிறந்த ஊடகவியலாளர், மின்னணு ஊடகநிபுணர் சரண்யா லூயிஸ், எனது தயாரிப்பாளராக அமைந்தது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம். அவரது வழிகாட்டுதலில் அமைந்திருக்கிற இந்த குழு, எதிர்பார்ப்புகளை மிஞ்சும் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது” என பெருமிதப்படுகிறார் இயக்குனர் பிரியதர்சினி.

சென்னையில் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து நடைபெற உள்ளது. இத்திரைபடத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் பிரியதர்சினி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles