.
.

.

Latest Update

கதையில் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“


மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ்.T / இசை – ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,

கலை – ஜெயகுமார் / நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர் ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார் ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான். படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

இந்த படத்தில் ஒரு கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார். ஏற்கனவே நான் தயாரித்த வாழ்க ஜனநாயகம் படத்தின் போது நான் வளந்து வரும் நடிகன் நான் கேட்ட உடனே கே.ஆர்.விஜயா எனக்கு நடித்துக் கொடுத்தார். இப்போதும் கடமான் பாறை படத்திலும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கண்ணியமான எளிமையான அம்மாவாக நடித்துக் கொடுத்தார். பெரிய நடிகை என்ற எந்த ஒரு கர்வமும் இல்லாமல் அப்போது போல இப்போதும் இருக்கிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் ஜோடியாக ருக்க்ஷா என்ற கேரள பெண் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் மன்சூரலிகான்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles