.
.

.

Latest Update

“கனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் – எடிட்டர் ரூபன்!



கனா (ட்ரீம்) என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தவிர்க்க முடியாத சாரம், இந்த படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் குழுவினர் மகிழ்கிறார்கள். இயல்பாகவே ஒரு எடிட்டரின் மனதில் காட்சியின் நீளம், வேகம், எங்கு காட்சிகளை வெட்ட வேண்டும் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘கனா’வில் பணியாற்றிய ரூபனின் அனுபவம் வித்தியாசமானது.

சில திரைப்படங்கள் ‘எடிட்டர்கள்’ தங்கள் அடையாளத்தை மறந்து ரசிகர்களாக, அதன் ஒரு சில அம்சங்களுக்காக தொடர்ந்து பலமுறை பார்க்க வைக்கும். தனிப்பட்ட முறையில், நான் இந்த மாதிரி ஒரு சில படங்கள் எனக்கு இத்தகைய தாக்கத்தை அளித்திருக்கின்றன. குறிப்பாக, கனா திரைப்படத்தில் பணியாற்றும் போது, கட்ஸ் மற்றும் ட்ரான்சிஸன்ஸ் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை. படத்தின் எடிட்டிங்கின் போது நான் அப்படி உணர்வுகளோடு ஒரு பிணைப்பு இருந்தது. மேலும், சத்யராஜ் சார் கதாபாத்திரத்தின் மூலம் எனது தந்தையின் ஆராவை நான் உணரவும், அனுபவிக்கவும் முடிந்தது. இயல்பாகவே, தந்தைகள் எப்போதும் குழந்தைகளின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுப்பவர்கள். எல்லோருக்கும் இதேபோன்ற உணர்வை கனா நிச்சயமாக வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் எடிட்டர் ரூபன்.

படத்தின் நீளம் குறித்து அவர் கூறும்போது, “வழக்கமாக ஒரு படத்தின் நீளம் என்பது திரையில் படம் ஓடும் நேரத்தை சொல்வார்கள். ஆனால் கனா படம் முடிந்த பிறகும் கூட, உணர்ச்சிகள் மற்றும் உற்சாகத்ததுடன் வீட்டிற்கு செல்வீர்கள் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எங்களது குழுவினரை பொறுத்தவரையில், கனா எங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன், இது நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு உதவும்” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அருணாஜா காமராஜ்’ இயக்குனராக அறிமுகமாகும் கனா படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. முழுமையான ஒரு ‘கிரிக்கெட்’ படமான இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களும் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசு, முனீஸ்காந்த் என்கிற ராமதாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மோகன்ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுத திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மற்றும் லால்குடி இளையராஜாவின் கலை அமைப்பு கவனிக்க வைத்திருக்கின்றன.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles