.
.

.

Latest Update

சென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS!


முன்னணி திரைப்பட இசையமைப்பாளரும், 11 கர்நாடக இசை கலைஞர்களும் ஒன்று சேரும், சென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS!

இடம்:சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் ஹால், சேத்துப்பட்டு, சென்னை.
நாள்: 28 ஜூலை 2018.

அன்றைய தினம், திரை இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களின் கீர்த்தனைகளை பாட, இவ்வருட சங்கீத கலாநிதி திருமதி அருணா சாய்ராம், திருமதி நித்யஸ்ரீ மகாதேவன், திரு.சிக்கில் குருசரண், திரு.அபிஷேக் ரகுராம், திரு. உன்னி கிருஷ்ணன், செல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருமதி காயத்ரி வெங்கட்ராகவன், திருமதி அனுராதா ஸ்ரீராம், திரு ஸ்ரீராம் பரசுராம் மற்றும் திருச்சூர் சகோதரர்கள் ஆகிய 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் அந்த நிகழ்ச்சி மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சியின் நோக்கம்:

பாரம்பரிய இசை மெட்டுக்கள் மூலம் கதை சொல்லும் பாணியை இந்திய திரையுலகம் மட்டுமே முதலில் கையாள ஆரம்பித்தது. காலப்போக்கில், கதை சொல்லும் யுக்திகள் பல வளர்ந்தாலும், பாடல்கள் என்பது இயக்குனர்களுக்கு எப்போதுமே முக்கிய கருவியாகத்தான் இருந்துக் கொண்டிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி முதல் பாம்பே ஜெயஸ்ரீ வரை, ஜி.என்.பாலசுப்ரமணியன் முதல் உன்னி கிருஷ்ணன் வரை, என்றும் தனக்கு இணையில்லாத பாபனாசம் சிவன் என எண்ணற்றோர் திரையுலகில் முத்திரை பதித்திருக்கின்றனர். மேலும், ஜி.ராமனாதன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர், ராகங்களில் அமைந்த இசையில் பாடல்களை உருவாக்கி திரைப்படங்களை அழகுப்படுத்தியிருக்கின்றனர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் கோலோச்சிய இந்த சினிமாவிற்கும், பாரம்பரிய இசைக்குமான உறவினை கொண்டாடுவதே இந்த மூன்று மணி நேர நிகழ்ச்சியின் நோக்கம்.

நிகழ்ச்சியின் சிறப்பு:

எனினும், ஒரு பாரம்பரிய இசைக்கச்சேரி முழுவதும், முப்பது பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு திரை இசையமைப்பாளரின் கீர்த்தனைகளை இசைக்கப் போகிறார்கள் என்பது இதுவே முதல் முறை. இது மாதிரி ஒரு நிகழ்வை ரமேஷ் வினாயகம் அன்றி வேறு யாரால் உருவாக்க முடியும்?

ரமேஷ் வினாயகம் பற்றி:

அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல! ஒரு பாடகர், ஒரு ஆசிரியர், ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் படைப்பாளர் ஆவார்.

ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு (பென் கிங்க்ஸ்லீ நடித்த 'A Common Man') இசையமைத்ததிலிருந்து இந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் இசை வடிவங்களை உருவாக்கிய வரை, பக்தி பாடல்கள் முதல் fusion வரை, ஒரு தேர்ந்த பாடகர் முதல் ஒரு பாடலாசிரியர் வரை, ஒரு ஆசிரியர் முதல் இசை ஆராய்ச்சியாளர் வரை ரமேஷ் வினாயகத்தின் சாதனைகள் இசைத்துறையின் பல்வேறு நடைகளில் விரிந்து கிடக்கிறது.

’ராமானுஜன்’ திரைப்படத்திற்கு அவர் அமைத்த இசையை பெருமை மிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீடான The Cambridge Companion to Film Music விவாதித்திருக்கிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles