.
.

.

Latest Update

திருப்பூரில் 1000 மாணவர்கள் ரசித்து பாராட்டிய ‘எழுமின்’



வி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பத்திரிக்கையாளர்களாலும் பெரும் நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள விகாஷ் வித்யாலயா பள்ளியின் தாளாளர், தனது பள்ளியில் பயிலும் சுமார் 1000 மாணவ, மாணவிகளை இன்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் இத்திரைப்படத்தை காண ஏற்பாடு செய்துள்ளார்.

தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று படத்தினை பார்த்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும், பல மாவட்டங்களில் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியருக்கு இத்திரைப்படத்தை சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான வி பி விஜி தெரிவித்தார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles