.
.

.

Latest Update

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒரு பதிவாக உறுவாகிய “தமிழச்சியே”


“மிகவும் பொறுப்புமிக்க சமூகமும், ஊழலற்ற அரசாங்கமுமே உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை அனுபவிக்க உதவும்”. அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துக்கள்

சமீபத்தில் நான் வெளியிட்ட ‘இளையதளபதி ரசிகன் டா’ எனும் பாடல் ஒரு எளிய முயற்சியே ஆயினும் அது பெரும் வரவேற்பைபெற்றதற்கு அனைத்து பத்திரிக்கைகளும், இணையத்தளங்களும் கொடுத்த பேராதரவே காரணம். மிக்க நன்றி.

தற்போது, “தமிழச்சியே” எனும் ஒரு தனிப்பாடலை மக்களுக்காக உருவாக்கி வெளியிட்டு உள்ளோம். இப்பாடல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒரு பதிவாகவும், பெண்கள் ஒரு போகப்பொருளாகவே பார்க்கப்பட்டு வரும் நிலை மாறவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தும் படைக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை, போதிய வெளிச்சமின்மை, இல்லாதலால் ஏற்படும் அவலங்கள் போன்றவை இப்பாடலில் உணர்த்தப்பட்டுள்ளது. இப்பாடலை கவிஞர் எழில் வேந்தன் (மாங்காடு) எழுதியுள்ளார். கோயம்பத்தூரை சேர்ந்த புதுமுக இயக்குனர் ‘செந்தில் குமார்’ இப்பாடலுக்கு காட்சி அமைத்துள்ளார். சவாலான இந்த கருத்தை பாடலாக்க நேர்த்தியுடன் செந்தில் குமார் உழைத்துள்ளார். இந்த சமூக நோக்கோடு கூடிய பாடலுக்கு பங்கேற்ற அனைத்து நடிகர்களுக்கும், மற்றும் எங்கள் இசைத்தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. தீர்கா எனும் புதுமுக பாடகி என்னுடன் இனைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

“குருகல்யாண்மியூசிக்” என்ற எங்களது யூட்யூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இப்பாடலுக்கு தங்கள் பேராதரவை தருமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.

பாடல் முகவரி: https://www.youtube.com/watch?v=ROik5XyGzRA

நன்றிகளுடன்,

குருகல்யாண்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles