.
.

.

Latest Update

போடியம் ( PODIUM ) அமைப்பின் மேடைப் பேச்சுக் கலை பயிற்சி வகுப்பு துவக்கம்



சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது போடியம் (PODIUM) என்கிற அமைப்பு.

மேடைப் பேச்சுக் கலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிற இந்த அமைப்பின் நிறுவனர் வெங்கட்ரமண ஜோதிபாபு.
வடசென்னையைச் சேர்ந்த வெங்கட்ரமண ஜோதிபாபு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் சுயமுன்னேற்றப் பயிற்சியளித்து வருபவர்.

போடியம் அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், சிறப்பாக பேசுபவர்களுக்கு நட்சத்திரக் குறியிட்ட சான்றிதழ் என வழங்கி ஊக்குவித்து வருகிறார்.

தமிழகத்தின் முன்னணி தொழில் ஆலோசகர், கணக்குத் தணிக்கையாளர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் திறன் கொண்ட ‘வெற்றி விடியல்’ ஸ்ரீனிவாசன் போடியம் அமைப்பின் நிறுவனருக்கு முதன்மை வழிகாட்டியாகவும் இருந்து போடியம் அமைப்பின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகவும் இருக்கிறார்.

போடியம் அமைப்பானது பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவ மாணவிகளை ஊக்குவிப்பது தவிர, படைப்பாளிகளில் பேச்சாளர்களாகவும் இருப்பவர்களை ஒருங்கிணைத்து வெவ்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான கவி. முருகபாரதியை தலைமைப் பேச்சாளராகக் கொண்டு ‘பயிற்றுநர் ஒரு ரசவாதி’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தியது. அதையடுத்து கவிஞரும் பத்திரிகையாளருமான சு. கணேஷ்குமார் ‘நீங்களும் எழுதலாம் ஹைக்கூ’ என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்துவதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தது போடியம் அமைப்பு. இந்த அமைப்பின் மற்றொரு நிகழ்ச்சி ‘சினிமா பாப்கார்ன்’ என்ற தலைப்பில் திரைப்படங்களின் தோற்றம், வளர்ச்சி, கடந்து வந்த பாதை இவற்றை அலசியது.

இப்போது இந்த அமைப்பானது மேடைப் பேச்சுக் கலையை கற்றுக் கொடுப்பதற்காக பயிற்சி வகுப்பினைத் ( public speaking course ) தொடங்குகிறது.

பயிற்சி வகுப்பு விவரங்கள்

பயிற்சிக் காலம் எட்டு வாரங்கள்

பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சென்னை தி. நகரில் நடக்கும்.

முன்னணிப் பேச்சாளர்கள் பேச்சு பயிற்சியினை வழங்கவுள்ளார்கள்.

பயிற்சிக் கட்டணம் ரூ.3000 /-

பங்கேற்பவர்களுக்கு பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மட்டுமல்லாது பயிற்சி பெற்றவர்களுக்குமேடைப் பேச்சுக்கான வாய்ப்பினை உருவாக்கித் தருகிற முயற்சியையும் போடியம் அமைப்பு மேற்கொள்ளும்!

கூடுதல் விவரங்களுக்கு:- 98410 97077

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles