.
.

.

Latest Update

மேடை நாடக கலைஞர் ராதிகா பிரசித்தா நடித்த ‘ஐ எக்சிஸ்ட்’ என்ற குறும்படம்



மேடை நாடக கலைஞர் ராதிகா பிரசித்தா ஏற்கனவே தன்னுடய தனித்துவமான திறமையின் மூலம் ஒரு நடிகையாக, எந்த ஒரு அவசரமும் இல்லாமல் தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிரூபித்துள்ளார். இந்த நடிகை தனது மிகச்சிறப்பான நடிப்புடன்
‘ஐ எக்சிஸ்ட்’ என்ற குறும்படத்தின் மூலம் தன் படைப்பு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த குறும்படம் கூடுதலான பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது. இந்த 15 நிமிட குறும்படம்,ஆல் லைட்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல், கொச்சின் (சிறந்த குறும்படம் – சர்வதேச போட்டி பிரிவு) மற்றும் உட்பெக்கர் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் புதுடெல்லி (சிறந்த குறும்படம் – பாலினம்) ஆகியவற்றிலும் விருதுகளை வென்றிருக்கிறது. மேலும் ரோலிங் ஃபிரேம்ஸ் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பெங்களூரு, செர்ரி பிக்ஸ் பெர்லின் ஃபிலிம் சொசைட்டி, ஃபெஸ்டிவல் ஆஃப் விமன் மேக்கிங் ஃபிலடெல்பியா சாப்டர் மற்றும் சென்னை இண்டர்நேஷனல் டாகுமெண்டரி மற்றும் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆகிய விழாக்களில் திரையிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வேறுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த குறும்படம், ஒரு வழக்கமான இந்திய பெண்ணின் மனநிலையில் இருந்து, அந்த பெண்ணின் பல நிலைகளில் இதை சொல்ல முற்படுகிறது. இவை அனைத்திலும் ராதிகா பிரசித்தாவே நடித்திருக்கிறார். “ஆரம்பத்தில், நான் இந்த கதையை மேடை நாடகத்துக்காக எழுதினேன். இந்த குறும்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த குறும்படத்தில் நான் நடிக்க விரும்பியதன் நோக்கம், என் நடிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும், இந்த மாதிரியான சவலான கதாபாத்திரத்தில் நடிக்கவும் தான். ஏனென்றால் என் குற்றம் கடிதல் மற்றும் கடுகு படங்களுக்கு பிறகு எனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் தான் வழங்கப்பட்டது. இது எனது தனிப்பட்ட சிக்கல்களில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் இருந்தது. இந்த குறும்படத்தை முடித்த பிறகு, திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதற்கு நிச்சயம் தேர்வு செய்யப்படும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் விருதுகளை வென்றெடுப்பது நாங்களே எதிர்பார்த்திராத ஒன்றாகும்” என்றார் ராதிகா பிரசித்தா.

பொதுமக்கள் பார்வைக்காக இந்த குறும்படத்தை யூடியூபில் வெளியிடும் முடிவை பற்றி ராதிகா கூறும்போது, “சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் பாலியல் துன்புறுத்தல் பெரிதும் விவாதிக்கப்படும் தலைப்பாக இருந்தது என்னை தூண்டியது. இந்த குறும்படம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற தைரியம் மற்றும் உறுதியை இது எனக்கு அளித்தது. இதை நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும்.

இந்த ‘குற்றம் கடிதல்’ நடிகை மேலும் சில மேடை நாடகங்களுக்கான திரைக்கதைகளை எழுதி வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அது பற்றி எதுவும் வெளிப்படையாக தற்போது கூற முடியாது என்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles