.
.

.

Latest Update

ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!!



சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’.

இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது.

இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது.

வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தியா தவிர்த்து) பெற்றுள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் ’டத்தோ’மாலிக் தெரிவித்துள்ளார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles