.
.

.

Latest Update

விஜய் அஜித்தை வைத்து படங்களை எடுத்த இயக்குனரின் புதிய படம் – தாராவி


வசந்தகால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல், ஐ லவ் இந்தியா ஆகிய வெற்றிப்படங்களை ரமேஷ் அரவிந்த், சரத்குமார், விஜயகாந்த், அஜித்குமார், பிரசாந்த் ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் இயக்குனர் பவித்ரன்.

விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்தவரும் இவரே, சிறிது இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தாராவி”

மும்மையில் தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதைதான் “தாராவி”. இவர்களில் ஒருவனை அழகுப்பதுமையான கல்லூரி மாணவி காதிலிக்கிறாள். அவளுடைய பெற்றோர் வசதி மிக்கவர்கள். ஆனால் இவர்களில் காதலுக்கு வேறொரு ரூபத்தில் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையிலிருந்து நண்பர்கள் உதவியுடன் தப்பித்து மணமுடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதைக்களம்.

சதிஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சினா, லியோ ஆகியோருடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷ்யாம், லதா நடிக்க கதாநாயகியாக சுனுலட்சுமி (நயன்தாரா படமான “அறம்” படத்தில் நடித்து வருகிறார்) அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

வி.டி.விஜயன் படத்தொகுப்பையும், மும்பை மாஸ்டரான அப்பாஸ் சண்டை பயிற்சியையும், பாரதி அகர்வால் நடன் பயிற்சியையும் கவனிக்கின்றனர். பல விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ள பவித்ரனின் மகனான அபய் பவித்ரன் இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். புளியந்தோப்பு பழனி, பவித்ரன் பாடல்களை எழுதியுள்ளனர்.

மும்பையில் தாராவி, தமிழ்நாட்டில் சாலக்குடி ஆகிய இடங்களில் மணிகண்டன் ஒளிப்பதிவில் “தாராவி” படம் வளர்ந்துள்ளது.

மும்பை நல்லரசன், பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் ஏ.ஆர்.எஸ்.இண்டர்நேஷனலுக்காக இப்படத்தை தயாரிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பவிதரன் டைரக்ட் செய்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles