.
.

.

Latest Update

வெறும் 60 வினாடிகளில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசை புதிய கின்னஸ் சாதனை


கலையின் மீது ஒரு கலைஞனுக்கு இருக்கும் காதலும், அர்ப்பணிப்பும் தான் அவனை மேதையாக்குகின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். தன்னுடைய சிறு வயது முதலில் இருந்தே டிரம்ஸ் இசை கருவியில் பயிற்சி பெற்று வரும் சித்தார்த் நாகராஜன், தற்போது வெறும் 60 வினாடிகளில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசை கருவியில் ஒலி எழுப்பி, புதிய கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறார். இவருடைய தந்தை நாகி பிரபல டிரம்ஸ் வித்துவான் மட்டுமின்றி, ஸ்ரீ இளையராஜா, வித்யாசாகர் உட்பட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சராசரியாக ஒரு வினாடிக்கு 35 தடவை தன்னுடைய டிரம்ஸ் வாசிக்கும் கோல்களால் ஒலி எழுப்பி, கின்னஸ் ரெக்கார்டில் புதிய சாதனையை படைத்து இருக்கிறர் சித்தார்த். இதற்கு முன் ஆஸ்திரேலிய டிரம்ஸ் கலைஞர் ஜார்ஜ் யூரோசெவிக் ஒரு நிமடத்தில் 1589 தடவை ஒலி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் சித்தார்த். இரண்டு லிம்கா விருதுகளை பெற்று இருப்பது மட்டுமின்றி, ஒரு முறை ஆசிய சாதனையாளர்கள் புத்தகத்திலும், மூன்று முறை இந்திய சாதனையாளர்கள் புத்தகத்திலும், இடம் பெற்று இருக்கிறார் சித்தார்த் நாகராஜன்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles