நடிகர் அசோக் நடித்த “ஸ்கெட்ச்” குறும்படம்
இந்த “ஸ்கெட்ச்” சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து “ஸ்கெட்ச்” போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள். ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை. 22 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை எழுதி-இயக்கி இருக்கிறார் எம்.சாய். இது இவருக்கு முதல் குறும்படம். இந்த குறும்படத்தில் கதாநாயகனாக “முருகா”, “பிடிச்சிருக்கு”, “கோழி கூவுது” பட புகழ் நடிகர் அசோக் குமார் நடித்துள்ளார். இவர் தவிர “லொள்ளு சபா” புகழ் சுவாமிநாதன், “சுந்திரபாண்டியன்”, “மதயானை கூட்டம்”, “சேதுபதி” புகழ் காசி மாயன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் போக இப்படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் ஏற்கனவே பல திரைபடங்களில் நடித்தவர்கள்.