.
.

.

Latest Update

இனிமே இப்படித்தான் பிரஸ் மீட்யில் சந்தானம் உரையாடல்…..


Innimey Ippadithaan Press Meet Stills (7)இந்தப் படத்தோட ஆடியோ ரிலீஸ் பங்ஷன்லேயே நிறைய பேசியாச்சு. இன்னிக்கு இந்தப் படத்தைப் பத்தி மட்டும் பேசிடறேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தைத் தயாரிப்பது மிக, மிக எளிது, ஆனா, அந்தப் படத்தை வெளியிடுவது எவ்வளவு கஷ்டம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை பர்ஸ்ட் காப்பி பேஸ்ல நான்தான் தயாரித்தேன். அதுல நான் லைன் புரொடியூசர்.. இராம.நாராயணன் சார்தான் புரொடியூசர். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்துலேயும் நான் லைன் புரொடியூசர்தான், புரொடியூசர் பி.வி.பி. படத்தை எடுத்துக் கொடுத்துடுவேன், அதுக்கப்புறம் அதை ரிலீஸ் பண்றதுலாம், அந்தந்த தயாரிப்பாளரின் வேலை.

ஆனால், முதல் முறையா என்னோட இந்த ஹேன்ட்மேட் கம்பெனி சார்பா தயாரிக்கிற இந்தப் படத்தை நானேதான் ரிலீஸ் பண்ணப் போறேன். இப்போதுதான் ஒரு படத்தை வெளியிடுற கஷ்டமும், வலியும் தெரியுது.

ரிலீஸுக்கு தேதி பிடிக்கிறதுல இருந்து டைட்டில் பிடிக்கிறதுவரைக்கும் இங்க ஒரே பிரச்சனைதான். எல்லாரும் இடம் வாங்கி ரிஜிஸ்டர் பண்றாங்களோ இல்லையோ, தயாரிப்பாளர் சங்கத்துல போயி ஒரு டைட்டிலை ரிஜிஸ்டர் பண்ணிடறாங்க. எந்த தலைப்பைச் சொன்னாலும் அது தயாரிப்பாளர் சங்கத்துல ஏற்கெனவே பதிவு பண்ணின பெயரா இருக்கு.

>சும்மா, ‘நீ ஏண்டா என்னைக் கூப்பிட்ட’ அப்படின்னு கேட்டால், அந்தப் பெயரைக்கூட ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்காங்க. டைட்டில் வைக்கிறதுல இருந்து படத்தை ரிலீஸ் செய்றவரைக்கும் ரொம்ப ரொம்ப போராட வேண்டியிருக்கு.

இந்தப் படத்தோட இயக்குனர்கள் முருகன், மற்றும் ஆனந்த்.. இந்த இரண்டு பேரும்தான் என்னோட பலம். நான் இதுக்கு முன்னாடி பல படங்கள்ல பேசுன நகைச்சுவைகளுக்கும் சொந்தக்காரங்க அவங்கதான்.

இந்தப் படத்தைப் பேசிப் பேசிதான் படத்துக்கான ‘லைனை’ பிடிச்சோம். ஒரு அழகான காதல், யதார்த்தமான, நகைச்சுவை கலந்த படம் இது. கடைசியில சின்ன ஒரு மெசேஜ் இருக்கும். எல்லாருக்குமே பிடிக்கிற மாதிரியான படமா இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

படத்தில் பங்கு கொண்ட அனைவருமே எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அந்த ஒத்துழைப்பு இருந்ததால்தான் இவ்வளவு சீக்கிரம் இந்தப் படத்தை முடிச்சு திரைக்கு கொண்டு வர முடிஞ்சிருக்கு..” என்றார்.

கேள்வி பதில் சீஸனில் வழக்கம்போல கேள்விகள் பறந்து வர சளைக்காமல் பதில் சொன்னார் சந்தானம்.

“சிம்பு, ஆர்யா, உதயநிதி, கவுதம் மேனன் இந்த நாலு பேரின் படங்களில் மட்டுமே காமெடியனா இனிமேல் நடிப்பேன்னு ஆடியோ பங்ஷன்ல சொன்னீங்களே.. இதென்ன செண்டிமென்ட் முடிவா..?” என்ற கேள்விக்கு விளக்கமாக பதிலளித்தார் சந்தானம்.

“செண்டிமென்ட்டெல்லாம் இல்லீங்க.. அவங்க எல்லாருமே என் மீது நல்ல புரிதலுடன் இருக்கிற நண்பர்கள். அதனால் இவர்களின் படங்களில் மட்டும் காமெடியனா நடிப்பேன்னு சொன்னேன். புரிதலுக்கு உதாரணம் சொல்லணும்ன்னா…. ஆர்யாவை ட்விட்டர்ல ஒருத்தர் கேள்வி கேட்டார். ‘படம் முழுக்க உங்ககூட சந்தானம் வர்றாரே… அப்படின்னா அவரு ஹீரோவா..? நீங்க ஹீரோவா?’ன்னு. அதுக்கு அவன் சொன்ன பதில் ‘சந்தானம்தான் ஹீரோ. நான் வெறும் காமெடியன்தான்’னு. அதுக்காக நான் ஹீரோவும் இல்ல. அவன் காமெடியனும் இல்ல. இருந்தாலும் அந்த ஜோவியலான பதிலும், மனசும்தான் எனக்கு முக்கியம்.

நான் இப்போ ஹீரோவாவும் நடிக்க ஆரம்பிச்ச பிறகும் ஆர்யாகூட நடிக்கறது எப்பவும் போல வசதியாத்தான் இருக்கு. ஆனா மற்ற ஹீரோக்கள் படத்துல நடிக்கப் போனா ஒரு சிலர் ‘எங்க இவன் நம்மள டாமினேட் பண்ணுவானோ’ன்னு யோசிப்பாங்க. அது படத்தையே பாதிக்கலாம். ஆனா நான் சொன்ன அந்த நாலு பேர் படங்களிலும் இந்த பிரச்னை வராது. அதனால்தான் இந்த மாதிரி என்னையும் மதிச்சு, புரிஞ்சுக்கிட்ட நண்பர்கள் படத்துல மட்டும் காமெடியனா நடிப்பேன்ங்கிற அர்த்தத்துலதான் அப்படி சொன்னேன்..” என்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார் சந்தானம்.

“ஹீரோவாயிட்டீங்க.. மத்த ஹீரோக்களெல்லாம் அட்வைஸெல்லாம் செஞ்சிருப்பாங்களே…?” என்ற கேள்விக்கு.. “நிறையங்க.. உதயநிதி ஸ்டாலின் எப்படி ஸ்டைலா டிரெஸ் பண்ணணும்.. மேக்கப் எப்படியிருக்கணும்ன்னு சொன்னாரு.. சிம்புவும் ஆர்யாவும் ஆக்டிங் பத்தி சொன்னாங்க.. டான்ஸ் ஆடுறத பத்தி கிளாஸே எடுத்தாங்க..” என்றார்.

“உதயநிதியோட தொடர்ந்து நடிச்சீங்க. அவரோட ‘கெத்து’ படத்துல நீங்க இல்லியே..?” என்ற கேள்விக்கு, “அது நாங்க ரெண்டு பேருமே பேசி எடுத்த முடிவுதான். அவரோட படங்கள்ல நான் தொடர்ந்து நடிச்சேன். ஒவ்வொரு படத்துலயும் வேற, வேற மேனரிசம், பாடி லாங்குவேஜெல்லாம்கூட பண்ணினேன். ஆனாலும் ரெண்டு பேரும் தொடர்ந்து ஒண்ணாவே நடிச்சதால நான் நினைச்ச அளவு அதெல்லாம் கவனிக்கப்படல. அதனால ஒரு கேப் விட்டுப் பார்ப்போமேன்னுதான் இப்போ ஒரு சின்ன இடைவெளிவிட்டு இருக்கோம்..” என்றார்.

படம் ரிலீஸ் செய்றது கஷ்டமா இருக்குன்னு சொல்றீங்க.. உதயநிதி ஸ்டாலின் நிறைய படங்களை வாங்கி ரிலீஸ் பண்றாரே.. அவர்கிட்ட பேசியிருக்கலாமே..?” என்ற கேள்விக்கு, “ஒரு படத்தை ஆரம்பிக்கிறோம். ஸ்டெப் பை ஸ்டெப்பா போய் கடைசிலதான் வியாபாரம்ங்கிற ஏரியாவுக்கு வருவோம். இப்ப அது பற்றி பேசுறதுக்கான தேவை வரல. அப்படி வரும்போது கண்டிப்பா அவர்கிட்ட கேட்பேன்..” என்றார்.

ஆக.. இந்தப் படத்துக்காக அவர்கிட்ட போகப் போறதில்லைன்னு சொல்லியாச்சு.. தம் கட்டுங்க சந்தானம் பிரதர்.. ஜெயிப்பீங்க..! தன் மேல் நம்பிக்கை வைத்தவன்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறான்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles