.
.

.

Latest Update

ஓவியா நடிக்கும் “சீனி”


Seeni-Movie-Stills-23வேலம்மாள் சினி கிரி¢யேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மதுரை R.செல்வம் தயாரித்துள்ள திரைப்படம் ‘சீனி’.

கதாநாயகராக சஞ்சீவி எனும் புதமுகமும், கதாநாயகியாக ஒவியாவும் நடித்திருக்கிறார்கள். காமெடி நாயகராக பரத்ர வி அறிமுகமாகியிருக்கிறார். மேலும் ராதாரவி, சரவணன், செந்தில், சின்னி ஜெயந்த், கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார் சீனிவாசன், இயக்குநர் T.P.கஜேந்திரன், இயக்குநர் மனோஜ்குமார், வையாபுரி, சுவாமிநாதன், பாவா லட்சுமணன், ரவி மரியா, அருள்தாஸ் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இயக்குநர்கள் மனோஜ்குமார், சுராஜ் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராஜதுரை இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையில், E.K.நாகராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவர்களுடன் சீதா என்ற யானையும் இந்த ‘சீனி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் யானையாக இந்தப் படத்தில் வரும் ‘சீதா’ யானை., நிஜத்தில் TVS கம்பெனி பாரமாரிக்கும் யானையாகும். சீதா யானையின் பாகனாக இப்படத்தில் வீரபாகு எனும் பாத்திரத்தில் காமெடி நடிகர் செந்தில் இதுவரை ஏற்றிடாத கனமானதொரு கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறார்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த படித்த இளைஞன் அரசாங்க வேலைக்கு போக பிடிக்காமல் பெரிய தொழிலதிபர் ஆக வேண்டியதே லட்சியம் என பேராடுகிறான். அவனது போராட்டம் எவ்வாறு வெற்றிடைந்தது? எப்படி தொழிலதிபர் ஆனான்.?! என்பதுதான் இப்படத்தின் கதையாம்.

“அவனுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியது யார் யார்…?” என்பதே சீனி படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கருவும் களமும் கதையுமாகும்.

இந்தக் கதையை முழுக்க, முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து காதல், சென்டிமெண்ட்டுடன் கூடிய ஜனரஞ்சக படமாக உருவாக்கி இருக்கின்றனர்.

“யானை பங்கு பெறுவதால் மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு அம்சங்களால் ‘சீனி’ படமும் தேவர் பிலிம்ஸ், தேனான்டாள் பிலிம்ஸ். படங்களின் வா¢சையில் தரமான படமாக இருக்கும்.. இந்தப் படத்தில் காதல் உண்டு… ஆனால் கவர்ச்சி எனும் பெயா¢ல் ஆபாசம் துளியும் கிடையாது. குடும்பத்தோடு பார்க்கும் படமாக சீனி நிச்சயம் இருக்கும்…” என்கிறார் தயாரிப்பாளர் மதரை செல்வம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles