.
.

.

Latest Update

சென்னையில் இருந்து வால்பாறைக்கு செல்லும் ‘ஜின்’ பேய்..!


Preethi, Kalaiyarasan in Jinn Tamil Movie Stills

Preethi, Kalaiyarasan in Jinn Tamil Movie Stills

ரைட் மீடியா வொர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் ‘ஜின்’.

இந்தப் படத்தை சதீஷ் சந்திரசேகரன் இயக்கி வருகிறார். பி.ஈ. முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு குறும்ப படங்கள் இயக்க ஆரம்பித்தார். இதுவரையிலும் அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

சதீஷ் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படம்தான் இந்த ‘ஜின்’. இந்தப் படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன், ஜானி, ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்காந்த், ரமீஸ், காளி வெங்கட், ஹரி, அர்ஜுனன், ப்ரீத்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வந்த சமயத்தில் படத்தைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின் இயக்குனர் சதீஷ், நாயகன் ரமீஷ் ஆகியோரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இந்தப் படத்தில் முதலீடு செய்ய, அவர்கள் அனைவரையும் பங்குதாரர்களாகக் கொண்டு படப்பிடிப்பு தொடர்ந்துள்ளது.

படம் பற்றி இயக்குநர் கூறுகையில், “இதுவும் ஒரு பேய்ப் படம்தானே என நினைக்க வேண்டாம். இதுவரை வந்த பேய்ப் படங்களில் எங்காவது ஒரு இடத்திற்குச் சென்ற பிறகுதான் யாராவது ஒருவருக்குப் பேய் பிடிக்கும்.

ஆனால், இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பேய் இருக்கும். ஐந்து நண்பர்கள் சென்னை, ஈ.சி.ஆர்.-ல் உள் ஒரு ரிசார்ட்டுக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து வால்பாறைக்கு சுற்றுலா செல்கிறார்கள். ஐவரில் ஒருவருக்கு பேய் பிடித்தது கூடத் தெரியாமல் செல்கிறார்கள். யாருக்கு பேய் பிடித்தது, அதனால் என்ன நடந்தது என்பதை திகிலுடனும், விறுவிறுப்புடனும் கொடுத்திருக்கிறோம்.

என்னுடைய வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன் நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தைத்தான் படமாக்கியிருக்கிறேன். ‘ஜின்’ என்றால் அரேபிய மொழியில் பேய் என்று அர்த்தம், அதனால், படத்திற்கும் அது பொருத்தமாக இருக்கும்விதத்தில் வைத்திருக்கிறோம்…” என்கிறார் இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles