.
.

.

Latest Update

நடிகர் சிவகுமார் குடும்பம் நடத்தும் அகரத்தின் அடுத்த கட்டம் “தை”


IMG_1692சந்தோசம் என்பது நமக்கு மட்டும் இல்லை நம்மை சார்ந்தவர்களுகும் என்று சிலருக்கு மட்டும் தான் புரியும் அப்படி பட்டவர்களில் ஒருவர் நம்ம சிவகுமார் ஆம் தான் படிக்க மிகவும் சிரமப்பட்டு படித்தேன் என்ற உணர்வு அவருக்கு சிறு வயதிலே மனசுக்குள் ஆழமாக பதிந்து விட்டது. நாம் பட்ட கஷ்டம் நல்ல படிக்கும் பிள்ளைகளை பாதிக்க கூடாது என்று 36 வருடத்துக்கு முன் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் படிப்புக்கு ஊக்க தொகை குடுக்க ஆரம்பித்தார் அது இன்று அவரின் சந்ததிகளால் அகரம் என்று உருவெடுத்து உள்ளது .

ஆம் அகரம் என்பது இன்று படிக்கும் நல்ல மாணவ மாணவிகளுக்கு ஆலமரம் வருடா வருடம் அகரத்தின் வளர்ச்சி அபாரம், அது நல்ல படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அடித்தளம். 30 மாணவ மனைவிகள் என்று ஆரம்பித்த அகரம் இன்று 1300 மாணவ மனைவிகள் பயன் பெறுகிறார்கள் என்பது மிக பெரிய சந்தோசம் இதற்கு சிவகுமாரின் குடும்பத்தை எப்படி பாராட்டுவது என்பது தெரியவில்லை .

நேற்று அகரம் மூலம் பயன் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பயன் பெற போகபோகும் மாணவ மாணவிகளுக்கும் ஊக்க தொகை மற்றும் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.

அதில் பலர் பேசினார் ஒரு இலங்கை அகதி மாணவர் பேசும் பொது நெஞ்சம் நெகிழ்ந்தது ஆம் அம்மா அப்பா இலங்கையில் இருக்குறார்களா இல்லையா என்று கூட எனக்கு தெரியாது என் அண்ணன் என்னை டாக்டர் ஆகவேண்டும் என்று கனவு கண்டார் ஆனால் அவர் இலங்கை போரில் இறந்து விட்டார் அப்போது என்ன செய்வது என்று தவித்த பொது என்னை அகரம் படிக்க வைத்தது என்று சொன்ன போது கண்கள் கலங்கியது இன்று நான் முனைவர் பட்டம் வாங்க போகிறேன் என்றும் எனக்கு இன்று அகரம் என்ற குடும்பமும் இருக்கு நல்ல அண்ணன் அக்கா அப்பா இருக்குறார்கள் என்று அந்த மாணவன் சொன்ன பொது சூர்யாவின் குடும்பத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை .

படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும்தான் அகரமா இல்லை என்று சொன்ன சூர்யா மற்றவர்களுக்கும் இருக்கு என்று சொன்னார் சூர்யா ஆம் கல்வி ஆரம்பித்த சூர்யா கைம் பெண்களுக்கு என்று சில நாட்கள் முன் ஆரம்பித்து அதில் முதல் கட்டமாக 25 பெண்களுக்கு ஊக்க தொகை குடுத்து அவர்களுக்கு தொழில் ஆரம்பிக்க பக்க பலமாக இருக்கம் சூர்யா அடுத்த கட்டமாக “தை” என்று புது அறகட்டளை அரபிக்க போகிறார் அதில் தொழிலில் ஆர்வமாக இருக்கும் மாணவ மாணவிகளுக்கு தொழில் கல்லூரி ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளார் அதற்காக மதுராந்தகம் அருகே 45,000 சதுர அடியில் நிலம் வாங்கி வேலைகள் நடந்து கொண்டு இருக்கு விரைவில் இது செயல்பட தொடங்கும் என்றும் சொன்னார் . இந்த வெற்றிக்கு நங்கள் மட்டும் இல்லை பலர் முன் வந்து நன்கொடை செயகுறார்கள் பல கல்லூரி நிறுவனம் எங்கள் அகரம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கல்வி கொடுக்கிறார்கள் என்றும் சொன்னார். அது மட்டும் இல்லை கொரட்டூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் குடும்பம் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை அகரத்துக்கு கொடுத்து உள்ளது இதன் மூலம் 30 பேர் இங்கு தங்கி படிக்கும் வசதி பெற்று உள்ளனர் என்றும் சொன்னார் .

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles