.
.

.

Latest Update

பாண்டியராஜன் நடிக்கும் “ஆய்வுக்கூடம்”


unnamedமாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரித்திருக்கும் படம் “ஆய்வுக்கூடம்”. இதில் நடிகர் பாண்டியராஜன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
படத்தில் ஆராய்ச்சியாளராக நடித்துள்ள பாண்டியராஜன் மனநோயாளி ஒருவரின் மூளையை பைட்டருக்கும், பைட்டரின் மூளையை மனநோயாளிக்கும் மாற்றுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் காமடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன்.
படத்தின் கதை பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்த தயாரிப்பாளர் அறிவழகன், படத்தை வாங்கி தனது PKA பிலிம்ஸ் சார்பில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க சிங்கப்பூர், மலேசியா, துபாய், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார்.
படத்தில் புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் ப்ரீத்தி,சொந்தர்,பிரபுராஜ்,ரியாஸ்,பவுனிஜெய்சன், நெல்லைசிவா,செம்புலி ஜெகன்,ராஜராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் “ U “ சான்றிதழ் கொடுத்து பாராட்டி உள்ளனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles