.
.

.

Latest Update

மீண்டும் இணையும் ‘ஈட்டி கூட்டணி


தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் ‘நாடோடிகள்’, ‘ஈட்டி’ மற்றும் ‘மிருதன்’ போன்ற தரமான கதைகளையும், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறது.

தரமான வெற்றி படங்களை கொடுத்துவரும் இந்நிறுவனம் தற்போது சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தையும், தங்களது நிறுவனத்தின் 10-வது படைப்பாக, ஜீவா – நிக்கி கல்ராணி நடிப்பில் ‘கீ’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஈட்டி’. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.

இப்போது அதே ‘ஈட்டி’ பட கதாநாயகனான அதர்வாவுடன் மீண்டும் இணைந்து தனது அடுத்த படத்தை துவக்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார்.

சாம் ஆண்டனின் காமெடி கலந்த திரைக்கதையும், அதர்வாவின் அர்ப்பணிப்பான நடிப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். படத்தில் பங்கு பெறவிருக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.

ஒரு விளையாட்டு வீரனின் கதையை யதார்த்தத்தோடு, கமர்சியல் அம்சங்களையும் கலந்து சொன்ன வெற்றி படம்தான் ‘ஈட்டி’. இப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணையவுள்ள இந்த வெற்றி கூட்டணி, தங்களது அடுத்த படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் துவக்க இருக்கிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles