.
.

.

Latest Update

Dr.ராஜசேகர் – ஜீவிதாவின் மகள் ஷிவானி தமிழில் அறிமுகமாகிறார்


??

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு ‘இதுதாண்டா போலீஸ்’ போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr.ராஜசேகர். ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையான ஜீவிதா இவரது மனைவி. இவர்களது மகளான ஷிவானி ராஜசேகர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.இது பற்றி ஷிவானி பேசும்போது, “என் அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே எனக்கு அறிமுகம் உள்ளது. சின்ன வயதில் இருந்தே பரத நாட்டியம், குச்சிப்பிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட், கிடார், வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன்.

நானும் என் தங்கை ஷிவாத்மிகாவும் யூ டியுப் பார்த்து பாடி கொண்டே இருப்போம். இது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நானும் தங்கையும் கிக் பாக்சிங் படித்து வருகிறோம். எனக்கு பிட்னஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அது எனக்கு ஒரு அடிக்சன் மாதிரி.நான் பொறந்தது மட்டும்தான் தமிழ்நாடு. வளர்ந்தது ஹைதராபாத்தில்தான். உறவினர்கள் அனைவரும் சென்னையில்தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசும்போது தமிழில்தான் பேசுவோம்.

தற்போது நான் 3-வது வருடம் மருத்துவம் படித்து வருகிறேன். நிறைய தமிழ் படங்களை பார்ப்பேன். நடிகர் தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த ‘3’ படத்தை பார்த்து எமோஷனலாகி அழுதேவிட்டேன். விஷாலையும் எனக்கும் மிகவும் பிடிக்கும். அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும்கூட. நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவரையும் எனக்கு பிடிக்கும். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும்.

அப்பாதான் என்னுடைய ஆல் டைம் ஹீரோ. அப்பாவும், அம்மாவும் சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன். முதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்..” என்கிறார் ஷிவானி.

வாம்மா மின்னல்… பிடிச்சிருந்தா கோவில் கட்டாமல்விட மாட்டோம்..!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles