.
.

.

Latest Update

முத்தக் காட்சியில்லாமல் வருகிறது ‘சத்யா’ திரைப்படம்..!


நாதாம்பாள் ஃபிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ் வழங்க, சிபிராஜ் தயாரித்து நடிக்கும் திரைப்படம் ‘சத்யா’.

இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘சைத்தான்’ படத்தின் இயக்குநரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

‘சத்யா’ படம் பற்றி இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “கமல்ஹாசனின் நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சத்யா’.

கமல் சாருக்கும் ‘சத்யா’ படம் அவருடைய கேரியரில் திருப்புமுனை படமாகவும் அமைந்தது. அதே போல் இந்த ‘சத்யா’ சிபிராஜுக்கு அவருடைய கேரியரில் நிச்சயம் திருப்புமுனை படமாக இருக்கும்.

‘சத்யா’ படத்தின் தலைப்பு ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருந்தது. கமல் சாரிடம் நாங்கள், “இந்த தலைப்பு எங்கள் படத்துக்கு சரியாக இருக்கும்..” என்று கேட்டவுடன் எங்களுக்கு ‘சத்யா’ என்ற மாஸ் டைட்டிலை கையெழுத்திட்டு கொடுத்தார். அவருக்கு என்னுடைய சார்பாகவும் எங்களுடைய யூனிட்டின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த்ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்ளிலும் நடித்துள்ளனர். இதில் வரலட்சுமியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் ஒன்றாகும். இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார். ரம்யாவுக்கு இப்படம் பெரிய பெயர் வாங்கி தரும்.

இப்படத்துக்கு இசை ‘555’ புகழ் சைமன் இசையமைத்துள்ளார். அவருடைய இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது.

இந்த ‘சத்யா’ திரைப்படம், தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஷணம்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான். ‘ஷணம்’ திரைப்படம் வழக்கமான தெலுங்கு திரைப்படம் போல் இருக்காது. அது புதுமையான ஒரு எண்டர்டெய்னர் ஆகும். தமிழுக்காக கதையில் புதிதாக நிறைய விஷயங்களை சேர்த்து உருவாக்கியுள்ளோம். இதுவொரு கிரைம் த்ரில்லர். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளோம்.

படத்தின் கதையின்படி கிரைம் ஒன்று நடக்கும். அப்படி அது நடக்கும்போது எப்போதும் அது போலீஸின் பார்வையில் செல்வது போல்தான் கதை இருக்கும். ஆனால் இந்த கதை சத்யா என்ற சாதாரணமான ஒரு நபரின் பார்வையில் செல்வது போல் இருக்கும். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பதுவரை செல்லும் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும்.இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார். அவருடைய லுக்கை மாற்றி புதிதாக காட்ட வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. இதை நான் அவரிடம் கூறியதும், “நிச்சயமாக நீங்கள் என்ன சொன்னாலும் செய்யலாம்…” என்று சிபிராஜும் முன்வந்தார். இந்த லுக்குக்காக நேரமெடுத்து காத்திருந்து படபிடிப்புக்கு சென்றோம் .

இப்படத்தை வர்தா புயல் வந்த அன்றுகூட படமாக்கினோம். அன்று நாங்கள் அம்பத்தூரில் உள்ள ஒரு இடத்தில் செட் போட்டு படமக்கிக் கொண்டிருந்தோம். புயல் அடித்த பின்புதான் வெளியே வரமுடியும் என்பதால் நாங்கள் உள்ளேயேதான் இருந்தோம். புயல் வரப் போகிறது என்று தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய புயலாக இருக்கும் என்று தெரியாது.

இந்தப் படத்தைப் பொறுத்தமட்டில் சிபிராஜ் மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு முத்தக் காட்சி தேவையானதாக இருந்தது. சிபிராஜிடம் நான் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் ‘என்னால் நடிக்க முடியாது.. ஸாரி’ என்று கூறிவிட்டார்.நான் எவ்வளவோ அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். அந்த லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்ததற்கான காரணம், அவருடைய மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதால்தான்.

இந்த படம் மிக சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று நிச்சயமாக கூறமுடியும். எனக்கு கமர்ஷியல் திரைப்படம் எடுக்க தெரியாது என்று நினைத்து கொண்டிருந்தேன். படத்தை இப்போது பார்க்கும்போது இது என்னை ஊக்குவிக்கும் வகையில் வந்துள்ளது. ‘சத்யா’ திரைப்படம் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது…” என்றார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles