.
.

.

Latest Update

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வருகிறது புதிய ‘க்ளீன் இந்தியா’வீடியோ கேம்!


விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வருகிறது புதிய ‘க்ளீன் இந்தியா’வீடியோ கேம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ‘க்ளீன் இந்தியா’ இயக்கத்துக்கு பல்வேறு தரப்பிலான திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து அடையாளமாக ஒரு நாள் தெருவில் இறங்கித் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்.அதைச்சிலர் இன்றும் தொடர்கிறார்கள்.

விஜய் பிறந்த நாளையொட்டி அவர்களது ரசிகர்களை உற்சாகப் படுத்தவும்’க்ளீன் இந்தியா’ அதாவது தூய்மை இந்தியா முழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு வீடியோ கேம் உருவாக்கப் பட்டுள்ளது.

பொதுவாக கேம்களில் அடிப்பது, குத்துவது ,மோதுவது ,துரத்துவது ,சுடுவது போல இதில் குப்பையை அகற்றுவதுதான் செயல்படாக இருக்கும்.
விஜய்தான் இப்படிஞ் சுத்தம் செய்யும் ஹீரோ.

இந்த விளையாட்டை வடிவமைத்துள்ளவர்கள் ஸ்கை டவ் சொல்யூஷன் நிறுவனம். இவர்கள் வடிவமைத்து அண்மையில் வெளியான ‘கபார் இஸ் பேக்’கேமை ஸ்ருதிஹாசன் வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.அதற்கு முன் ‘கத்தி’ கேமை உருவாக்கியதும் இவர்கள்தான்.பாலிவுட் படங்களின் கேமில் பங்கெடுத்த பலரும் இதில் பணியாற்றியுள்ளனர்.

ஸ்கை டவ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சி. இ. ஓ சிவா இது பற்றிப் பேசும் போது ” இது விஜய் ரசிகர்களுக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த கேமில் ஐந்து நிலைகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஈ.ஸி.மீடியம், ஹார்டு என்று அதாவது சுலபம், இடைப்பட்டது, கடினம். என்று மூன்று வகை வேகத்தில் விளையாட்டுகள் இருக்கும். விருப்பப் பட்டதைத் தேர்வு செய்து விளையாடலாம். மேலும் இந்த தூய்மைப் பணி சென்னையில் தொடங்கி கொச்சி, மும்பை, டில்லி, கொல்கத்தா என்று ஐந்து மெட்ரோ நகரங்களில் நடக்கிற மாதிரி இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதத்திலும் குப்பைகளை அகற்ற வேண்டும் உதாரணத்துக்கு கொச்சியில் ஆற்றில் உள்ள குப்பைகளை கொக்கி போட்டு அகற்ற வேண்டும்.
மும்பையில் சாலையிலுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.கொல்கத்தாவில் மேலிருந்து வந்து விழும் குப்பைகளை அகற்ற வேண்டும் இப்படி வெவ்வேறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்கிறார்.

இந்த கேமிற்கு நல்ல நோக்கம் உள்ளது என்பதால் விஜய் அனுமதி கொடுத்துள்ளார்.

கேமை பார்த்த விஜய் ரசித்ததுடன் பாராட்டித் தன் மகிழ்ச்சியையும் தெரிவித்து இருக்கிறார்.

பாலிவுட்டில் பெரிய கதாநாயகர்களின் ஒவ்வொரு படத்திற்கும் கேம்கள் வருகின்றன .ஷாருக்கான், அமீர்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் கேம் வடிவமைக்க ஆர்வம் காட்டுபவர்கள். அவர்களின்.
‘டான்’, ‘க்ரீஷ்’ ‘ஹாப்பி நியூ இயர்’ ‘பி.கே’ போன்ற கேம்கள் பெரிய வெற்றி பெற்றவை.

தமிழில் ‘கோச்சடையான்’ ‘கத்தி’ ,’அஞ்சான்’போன்று சிலவே வந்துள்ளன.

பொதுவாக கேம் ஒரு கெட்ட பழக்கம் என்றும் விலகிவிட முடியாதபடி ஈர்க்கும் சக்தி என்று விமர்சிப்பவர்கள் கூட இதை வரவேற்பார்கள். ஏனென்றால் குப்பைகளை அகற்றுவதும், தூய்மையாக இரு என்பதும் தவறல்ல.தூய்மையாக இரு என்றுதான் இது வலியுறுத்தி அடிமைப் படுத்தும்

நல்ல பழக்கத்துக்கு அடிமையாகலாம் தவறில்லைதானே அதை யாரும் குறை சொல்லமாட்டார்கள் அல்லவா என்கிறார்கள் வடிவமைத்தவர்கள்.

Game in Android : http://bitly.com/CleanIndiaVijay

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles