கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான “தயாரிப்பு எண் 3” உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை ‘சலீம்’ வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார் இயக்க, சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்வதோடு, சசிகுமார் நடித்த முந்தைய படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. […]
பெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல! – சீறும் வில்லன் நடிகர்
இலங்கை திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக ‘அந்த நிமிடம்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். இலங்கையில் சிறந்த நடிகர் மற்றும் பாப்புலர் ஆக்டர் என இரண்டு நேஷனல் அவார்டைத் தட்டிச் சென்றுள்ளார். குழந்தை இயேசு என்பவர் இயக்கியுள்ள ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளதோடு, இந்தப் படத்தின் கதைக் கருவும் வீர்சிங்கே தந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நுழைந்தது […]
நடிகர் ஜீவனின் “அசரீரி”
அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை […]
NGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..!
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பாடலை பாடிய ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 170க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தற்போது விரைவில் ஹாரர் திரில்லராக வெளியாக உள்ள படம் ஒன்றின் பைலட் படமாக உருவாகியுள்ள படத்தில் ‘வெண்பனி இரவில்’ என்கிற பாடலை பாடியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுரேஷ் […]
மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம் ‘சனம் ஷெட்டி’க்கு கைமாறியது..!
மிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான். மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் […]
சினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்…..
தினமும் வாய்ப்பு தேடினாலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விட மாட்டோமா என ஏங்குபவர்கள் ஏராளம். அப்படியிருக்க சிலருக்கு அதிர்ஷ்டம் தானாக கதவைத் தட்டும். இதில் ரெண்டும் கலந்த கலவை கார்த்திக் சிவக்குமார். திருப்பூர் பின்னலாடை நகரத்தில் பனியன் ஏற்றுமதியை சிறு முதலீட்டில் நடத்தி வரும் இவருக்கு, சென்னையில் சினிமா நண்பர்கள் அதிகம். தொழில் சார்ந்து சென்னைக்கு வந்து போகும்போது, அடித்தது அதிர்ஷ்டம். சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு காட்சியில் வந்து போனவருக்கு சினிமா மீது […]
‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியான படங்களில் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்ட தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் பெருமதிப்புக்குரிய ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது. கனடாவின் மான்ட்ரியல் நகரில் எதிர்வரும் ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரையில் நடைபெறும் இவ்விழா, ‘வட அமெரிக்காவின் மிகச் சிறந்த மற்றும் பன்முகப்பட்ட வகையான திரைப்படங்களை திரையிடும் பெரு விழா’ என சிறப்பு பெயர் பெற்றது. இத்திரைப்பட விழாவில் […]
காஞ்சனா ஹந்தி ரீமேக் மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது. பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் […]
50 காவலர்களுக்கு கூலிங்கிளாஸ் – நடிகர் ஜெய்வந்த்
நேரம் – காலம், வெயில் – மழை, சொந்தம் – பந்தம், மனைவி – மக்கள், விருப்பு – வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது. நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படாவண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள். […]
இசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி
இசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி “ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், […]