மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் நடிகர் விஷால் நடிகர் ஆர்யா நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “எனிமி” திபாவளிக்கு வெளியாக தயாராக உள்ளது .சென்சார் யு / ஏ கிடத்துள்ளது
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில்
ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை […]
இயக்குனர் N.T.நந்தா இயக்கத்தில் துர்வா – சினேகன் – சாக்ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும் “குறுக்கு வழி”
ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’. சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார். கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்கம், ஒளிப்பதிவு – N.T.நந்தாகலை – ஆரோக்யராஜ்புரொடக்ஷன் எக்ஸிகுயுடிவ் – KKS ராஜாபுரொடக்ஷன் மேனேஜர் – […]
சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்
‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார் தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார். முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார். சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும். இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”. தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார். ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது