30.4.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 17ம்தேதி. பௌர்ணமி காலை 6.51 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பிரதமை திதி. சித்திரை நட்சத்திரம் மதியம் 2.24 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- இன்று பிரதமை திதி முழுவதும் இருப்பதால் நல்லநேரம் குறிக்கப்படவில்லை. […]
வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் […]
’யா யா’ பட தயாரிப்பாளரின் அடுத்த படம்
”M10 PRODUCTIONS” சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் “யா யா”. இப்படத்தில் “மிர்ச்சி” சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் M.S.முருகராஜ். M.S. முருகராஜ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் […]
விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..!
கடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் நடிகர் விமல்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், […]
ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய நடிகர் பிரபாஸ்
S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது. இந்த நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். “எங்களின் “பாகுபலி 2″ படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நாள் எனக்கு ஒரு சிறப்புமிகு நாள். இந்நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது அன்பை காணிக்கையாக்குகிறேன். இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான என் பயணத்தில் ஒரு பகுதியாக […]
இன்றைய ராசி பலன்கள் – 29.4.2018
29.4.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 16ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 6.56 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி. சித்திரை நட்சத்திரம் மதியம் 2.24 மணி வரை பின் ஸ்வாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி […]
அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் வேண்டுகோள்
அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் வேண்டுகோள் மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அப்பட இயக்குநர் சந்தோஷ் P.ஜெயகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் […]
கதையில் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“
மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, […]
இன்றைய ராசி பலன்கள் – 28.4.2018
28.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 15ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை திரயோதசி திதி காலை 8.34 மணி வரை பின் சதுர்த்தசி திதி. ஹஸ்தம் நட்சத்திரம் மதியம் 2.08 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- இன்று முழுவதும் மரண யோகம் கரிநாள் இருப்பதால் […]
என் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம் நடிகர் மைம் கோபி
தமிழ் சினமாவில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்திர நடிகர்களில் முக்கியமானவர் மைம் கோபி. நிறைய படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங்களுக்கு மேல் இலக்கை தொட்டிருப்பவர் இவர். அவர் கூறியதாவது.. பிரசன்னா நடிப்பில் மாரிமுத்து இயக்கத்தில் உருவான “ கண்ணும் கண்ணும் “ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன் அதை தொடர்ந்து மெட்ராஸ், மாரி, கபாலி, மாயா, கெத்து, பைரவா, உறியடி, கதகளி, விஜயகாந்த் மகன் நடித்த மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். வளர்ந்து வரும் […]