Hostel Movie Sneak Peek
Kathir Movie Sneak Peek – 1
கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம்
மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுத பாடல் உருவாக்கத்தை சுவாரஸ்யமாக இந்த வீடியோவில் காணலாம்.சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம், விரைவில் ஆடியோ ரிலீஸ், தொடர்ந்து திரையரங்குகளில் வரவிருக்கிறது. இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.https://youtu.be/2sSHd3Z_InA
சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா
பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள்! கே. ராஜன் பேச்சு குடிப்பதற்கு வழிகாட்டும் சினிமா கதாநாயகர்கள்!தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் […]
டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ்
மீண்டும்புதிதாகமலர்கிறதுபள்ளிக்காலநினைவுகளைகிளறும் “கனாகாணும்காலங்கள்” வெப்சீரிஸ் ! புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது ! 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட இத்தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த வெப் சீரீஸீன் கதை. தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடிக்கிறார். இத்தொடரில் நடித்து பிரபலமான முந்தைய தொடரின் நடிகர்கள், புதிய தொடர் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘பிக்பாஸ்’ புகழ் நடிகர் ராஜு கூறியதாவது.. என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு தளமாக இருந்தது ‘கனா காணும் காலங்கள்’ தொடர் தான். நான் காலேஜ் போய் படித்ததை விட இந்த தொடரில் நடித்த ஞாபகங்கள் தான் அதிகம் இருக்கிறது. அது ஒரு லைஃப் ஸ்டைல். கானா காணும் பலருக்கு என்னை மாதிரி நிறைய பேருக்கு ஒரு தளமாக இருந்துள்ளது. கனா காணுங்கள் இதோ புதிய தொடர் வருகிறது நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி. நடிகர் பால சரவணன் கூறியதாவது… கனா காணும் காலங்கள், இந்த பெயரை கேட்டவுடன் உள்ளூர ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. எனக்கு பல கனவை நனவாக்கி தந்தது இந்த தொடர் தான். நான் நடிகனாக இருக்க காரணம் இந்த தொடர் தான். எங்களுக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ அதே போல் இந்த புதிய தொடருக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது… கனா காணும் காலங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத உணர்வு. அது மீண்டும் வரப்போகிறது. நிறைய புதிய திறமைகளுடன் புதிய ஞாபகங்களுடன், சிரிப்பு சந்தோஷம் தர வரப்போகிறது, பார்த்து மகிழுங்கள் நன்றி. நடிகர் விஷ்ணு கூறியதாவது… எனக்கு நடிகர் ஆக ஆசை ஆனால் சொல்லிக்கொள்ள தயக்கம். அதை உடைத்து அந்த கனவை நனவாக்கி தந்தது கனா காணும் காலங்கள் தான். இப்போது மீண்டும் கனா காணும் காலங்கள் வரப்போகிறது. நான் எப்படி ஜெயித்திருக்கிறேனோ அதே போல் புது திறமையாளர்கள் வரப்போகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆதரவையும் தாருங்கள். நன்றி. வரும் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் கண்டுகளியுங்கள்.
பிரகாஷ்ராஜ் நடிப்பில் எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.”
தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. “கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.”இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை […]
ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”
Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது… எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் கிரிஷ் குமார் கூறியதாவது… வாய்ப்பு தந்த சுமந்த் அவர்களுக்கு நன்றி. 2021 ல் இந்தப் படம் எடுத்தோம். கொரோனாவுக்கு பிறகு பல படங்கள் ஓடிடி செல்லும் நேரத்தில், இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வரும் ரவி சாருக்கு நன்றி. படப்பிடிப்பில் ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் போபோ சசி கூறியதாவது… என்னை நம்பி வாய்ப்பு தந்த Trident Arts நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். எல்லோரும் சின்ன பட்ஜெட்டில் அரபிக்குத்து மாதிரி பாடல் வேண்டும் என்பார்கள் ஆனால் சுமந்த் அந்த மாதிரி எதுவும் கேட்காமல், என்னை இயல்பாக வைத்து கொண்டார். நான் பாடல் மாற்றலாம் என்றாலும் அவர் மறுத்து விடுவார். படத்திற்காக நிறைய உழைத்துள்ளார்கள். இதில் நடித்த அசோக், பிரியா இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி. நடிகர் kpy யோகி கூறியதாவது… எனக்கு முதல் மேடை இது. இப்படி ஒரு சினிமா போஸ்டரில் என் பெயரையும் முகத்தையும் பார்க்க பெருமையாக உள்ளது.. பெரும்பாலும் தொலைக்காட்சி நடிகர்களுக்கு திரையில் வாய்ப்பு தர மாட்டார்கள் ஆனால் சுமந்த் சார் நிறைய ஊக்கம் தந்து, இப்படத்தில் நல்ல கதாபாத்திரம், நீங்கள் நடியுங்கள் என்றார் அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்கும் போது ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா, சதீஷ் ஆகியோருக்கு நன்றி. முழுக்க முழுக்க இது ஒரு ஜாலியான படம். நல்ல ஜாலியாக வந்து பார்க்கலாம். படம் நல்லா வந்திருக்கு உங்கள் ஆதரவு தேவை எல்லோருக்கும் நன்றி. நடிகர் சதீஷ் கூறியதாவது… ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை ஆனால் நண்பன் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்க்க பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் கூறுகையில், இந்தப் படத்தின் இயக்குனர் சுமந்த் மற்றும் கலை இயக்குனர் துரை சார் ஆகிய இருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் , அவர்களுடன் இணைந்து பணி புரிந்தது மிகவும் சுலபமாக இருந்தது, இந்தப் படத்தில் கலை வேலைப்பாடுகள் மிகவும் நன்றாக இருந்தது, எனவே பல்வேறு கோணங்களில் என்னால் காட்சிகளை படமாக்க முடிந்தது, இந்தப் படத்தில் நடிகர் அசோக் ஒரு புதிய தோற்றத்தை ஏற்று நடித்தார், அது இதுவரை வேறு எந்த படங்களிலும் இல்லாதவாறு அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நானும் பங்களிப்பதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தொகுப்பாளர் ராகுல் பேசியதாவது… இந்தப் படம் மிக ஜாலியாக வேலை பார்த்தோம். எனக்கும் எடிட் செய்ய மிக ஈஸியாக இருந்தது. சுமந்த் அண்ணாவுக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் ரவி மரியா கூறியதாவது… 3 வருடம் ஹாஸ்டலில் தங்கி படித்த அனுபவங்களை எல்லாம் கொட்டி தீர்த்து விடலாம் என போனால் பிரியா பவானி சங்கருக்கு அப்பா என்று சொல்லிவிட்டார்கள். பிரியாவுடன் நடிக்கலாம் என ஓகே சொல்லிவிட்டேன். டைரக்டர் மிக தெளிவானவர், ரீமேக் படத்தை கெடுக்காமல் அவருக்கு என்ன தேவை என்பதை சரியாக சொல்லி வேலை வாங்கி விடுவார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்துள்ளார், மலையாள படத்தை மிஞ்சும் வகையில் படத்தை எடுத்துள்ளார். அசோக் செல்வன் மிக நன்றாக நடித்துள்ளார். மிக எளிமையானவர். காமெடி மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகிறது
தமிழ் சினிமாவை தாழ்த்தி பேசாதீர்கள் – ‘3.6.9’ விழாவில் ஆரி வேண்டுகோள்
இந்த படத்திற்கு வருமுன் படத்தை பற்றிய விசயங்களை கேட்டேன். சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள். ‘3.6.9’ எனது கார் நம்பர். அந்த நம்பர் பற்றி பலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. உலகில் எந்த விசயத்தை எடுத்து கொண்டாலும் அது ‘3.6.9’ நம்பரில் அடங்கிவிடும். அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு. அந்த கருத்தில் தான் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இங்கு பேசிய படக்குழுவினர் அனைவரும் அவர்களின் தாய் தந்தையரை வாழ்த்தி பேசியது பிடித்திருந்தது. இப்போது சினிமாவில் […]
நான் எப்போதும் ஹீரோ தான் – ‘3.6.9’ விழாவில் பாக்யராஜ் பேச்சு !
21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான். இங்கு இயக்குநர் என்னை படைத்த அப்பா அம்மாவுக்கு என ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் […]