ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் K.ஜோதிபிள்ளை – சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ நெஞ்சில் ஒரு ஓவியம் “ தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ராஜாமணி இசை – ஸ்டீபன் ராயல் பாடல்கள் – இளையகம்பன், கவிகாற்கோ, […]
தமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின் “ அர்ஜுன் ரெட்டி “
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க No.1 , பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களை தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “ அர்ஜுன் ரெட்டி “ தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்ட படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர்கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் “மிஸ்டர் லோக்கல்”.
ஒரு படத்தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக சிவ கார்த்திகேயன் படங்களின் தலைப்பு மக்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இருக்கும். அதை போலவே இயக்குனர் ராஜேஷ் படங்களின் தலைப்பும் பரபரப்பு கூட்டும் தலைப்பாகவே இருக்கும். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களும் அவ்வாறே சுவாரசியமான தலைப்பை கொண்ட படங்களாகவே இருக்கும். இவர்கள் மூவரும் இணைந்து பணிபுரியும் படம் என்னும் போது தலைப்பை பற்றிய எதிர்பார்ப்பு […]
சினிமாவில் சேருவது எப்படி? மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் எழுதி வெளியாகியிருக்கும் 99-வது நூல்!
குமுதம், குங்குமம், ராணி என முன்னணி பத்திரிகைகளுக்காக கமல், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, அனுஷ்கா, ஜெயம் ரவி, இயக்குநர்கள் ஷங்கர், சேரன், பி.சி.ஸ்ரீராம் என நூற்றுக்கணக்கான திரைக் கலைஞர்களை பேட்டியெடுத்து எழுதிய அனுபவமுள்ளவர். சினிமா செய்தியாளராக 25 வருடங்கள் கடந்து இப்போதும் முன்னணி பத்திரிகைகளுக்காக திரைப் பிரபலங்களைப் பேட்டியெடுத்து எழுதிவருபவர். 📌➡ அவரது எழுத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில், ‘திரையுலகப் பணிகள் என்னென்ன?’, ‘கதை, திரைக்கதை வித்தியாசம் என்ன?’, ‘டைரக்டரின் வேலைகள் என்னென்ன?’ […]
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் !!
பல வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா ,காமெடியன் / நடிகர் சூரி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் . மேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் […]
‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் […]
“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்
நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது, “நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்.. இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு […]
அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் .. சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான். எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி […]
மலையாள சினிமாவிற்கு போகும் நடிகர் கிருஷ்ணா
திறமையான நடிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது மலையாள சினிமா. வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் சவாலாகவும் பிரமிப்பாகவும் இருப்பதால் அதன் மீது தனி கண்னே வைத்துள்ளனர். வளர்ந்துவரும் கலைஞர்களையும் திறமையான நடிகர்களையும் இணைத்துக்கொள்ளும் மலையாள சினிமாவிற்கு அடுத்த வரவாக , தன் இளமை துள்ளும் நடிப்பால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் நடிகர் கிருஷ்னா இணையவுள்ளார். மின்னல் வேகத்தில், தனது அடுத்த படமாக மலையாளத்தில் “PICCASSO” என்ற படத்தின் மூலம் கேரளத்தில் கால் […]
தமிழ் சினிமாவில் நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”.
கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”. “காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . […]