பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் – என்ற சூப்பர்ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படம் டைட்டிலிலேயே அதிரடியை கிளப்பியிருக்கிறது இப்படத்தை தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறியது இத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம் ஜி ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம் […]
ரஜினி காந்த், விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் , தி.மு.க ஆற்காடு வீராசாமி, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , அ.இ.அ.தி.மு.க பொன்னையன் , தமிழ் அருவி மணியன் , மா.பா. பாண்டிய ராஜன் அ.இ.அ.தி.மு.க , நடராஜன் , ம.தி.மு.க தலைவர் வைகோ ,சத்யா தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ , வி.கே. […]
செப்டம்பர் 22 முதல் கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்கிள்
டேவ் கிபன்ஸ் மற்றும் மார்க் மில்லர் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான ‘தி ஸீக்ரெட் ஸர்வீஸ்’சை தழுவி உருவாக்கப்பட்ட படம்தான்,கிங்ஸ்மேன்: தி ஸீக்ரெட் ஸர்வீஸ்’. 2014 ஆம் ஆண்டு வெளியான அந்த படம், மிக பெரிய வெற்றியை பெற்றது! X-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படத்தை இயக்கியிருந்த மேத்யூ வாகன் தான் அதனையும் இயக்கி இருந்தார்! அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டை காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரஸ்யமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தை […]
நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ் திருமணம் இன்று நடைபெற்றது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் திரு ஜி. கிருஷ்ணா ரெட்டி – திருமதி ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ் – ன் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணமகனும் , மணமகளும் தங்க நிறத்தில் உடையணிந்து இருந்தனர். காலை […]
ராம் கிளிசரின் போடாமல் அழ வைத்தார் ‘தரமணி’ லிஸி ஆண்டனி
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை .அவமதிப்பு , கண்டுகொள்ளாமை , வெறுமை ,சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். அப்பாத்திரத்தின் அடையாளமின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது. ஆனால் […]
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ‘ஹௌரா பிரிட்ஜ்’
ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பது தற்போதய சமுதாயத்தில் உறுதியாக நிரூபணமாகியுள்ளது. நமது நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு வெற்றி படங்கள் என்றுமே வந்த வண்ணமுள்ளன. ‘தரமணி’ படத்தின் மூலம் தரமான வெற்றியை தந்த JSK Film Corporation நிறுவனம் தனது அடுத்த படமான ‘ஹௌரா பிரிட்ஜ்’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு திரில்லர் படமாகும். தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை லோஹித் இயக்கவுள்ளார். […]
திருப்பங்களுடன் ஒரு உணர்வுப்பூரமான காதல் கதை – அபியும் அனுவும்
சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. பல ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார்களும் காதல் கதைகள் மூலமாக பிறந்து வளர்ந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும் காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததேயில்லை. தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘அபியும் அனுவும்’ இப்பட்டியலில் சேர முனைப்போடுள்ளது . இப்படத்தில் மலையாள திரை உலகில் துரித வேகத்தில் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் […]
யுவன்-அனிருத் கூட்டணி – இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு
அசத்தலான கூட்டணிகளை அமைத்து தனது படத்தை மேலும் பெரிதாக்குவதில் தேர்ந்து வருகிறவர் ‘பலூன்’ பட இயக்குனர் சினிஷ். ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் ‘பலூன்’ தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலை பாடியுள்ளார். யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது. “ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ விளம்பர யுக்திகளும் அவ்வளவு […]
சூப்பர் ஸ்டார் பட டைட்டலில் நடிக்கும் G.V.பிரகாஷ்
மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப்பட தலைப்புகள் இன்றும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அனைவராலும் ரசிக்கப்படும் நடிகராக வெற்றி ரதத்தில் வேகமாக பயணித்து கொண்டிடுருக்கும் G V பிரகாஷ், பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தான் முதல் முறையாக இயக்கவிருக்கும் படத்தில் கதநாகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘குப்பத்து ராஜா’ என்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் தலைப்பை சூட்டியுள்ளனர். இப்படத்தினை ‘S Focuss’ சார்பில் திரு. எம்.சரவணன், திரு. எஸ்.சிராஜ் மற்றும் திரு.T. […]
“7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட இயக்குநர்கள்
‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, “7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் மூலம் புதிய யுக்தியுடன் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார். இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார். ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார். “7 ஸ்டார் – இது புன்னை நகர் […]