Actor Viji Chandrasekhar, who is popular for her performance onscreen, has embarked on a new journey following request from her near & dear ones. She starts an Online Acting Course with a duration of 10 days, each batch, commencing from July 5th via Zoom.
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”
கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார். எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது. க்ளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று […]
ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாகஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் […]
100 ஊழியர்களுக்கு மூன்று மாதசம்பளத்தை முன்பணமாக கொடுத்த நடிகர்
டார்லிங் – 2′ விதிமதி உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின் மூலம்தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ்ராஜா இவர் தன்னுடைய நிறுவனத்தில்( ரைட் ரூப்&அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு இந்த லாக் டவுன்சூழ் நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவர் களுக்குஉதவுகின்ற வகையில்3 மாத சம்பளத்தை முன்பாகவே கொடுத்து உதவியிருக்கிறார். இவர் நடித்தடார் லிங் – 2 படத்தை கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது இதில் […]
கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம்
உலக இசை தினத்தை முன்னிட்டு, உலகத் தமிழ் சங்கங்களுடன் இணைந்து இசையமைப்பாளர் கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம் அன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்பயணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக 300-க்கும் மேற்பட்ட படங்கள், தயாரிப்பாளராக 4 படங்களில் பணியாற்றிய கங்கை அமரனை கெளரவிக்கும் பொருட்டு உலக இசை தினமான வரும் ஜூன் […]
சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14ம் தேதி நடை திறக்கப்படும்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள் – இயக்குனர் பிரம்மா வேதனை
தேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’. ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பிரம்மா இயக்கி இருந்தார். இன்றைய சூழலில் நம் கல்வி துறைக்கே மிகவும் பயனுள்ளதான கருத்தை இப்படத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது இயக்குனர் பிரம்மா ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளினால் குழந்தைகளுக்கு உடல் மன சமூக ரீதியான சிக்கல்கள் உருவாகியுள்ளன. மேனிலை மாணவருக்கு […]
ஜெ.அன்பழகன் மறைவுக்கு இயக்குநர் அமீரின் இரங்கல்
எனதருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியை கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் திரு. ராஜா அன்பழகன் அவர்களிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலை பேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன். இந்நிலையில் இன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது. காரணம் அவரின் பழகும் தன்மை, […]
திரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு திரு.டி.ஆர் இரங்கல்
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி. ராஜேந்தர் M.A அவர்களின் இரங்கல் செய்தி சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவும், எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினருமான திரு.ஜெ.அன்பழகன் இன்று இயற்க்கை எய்தியதாக வந்த செய்தி எங்களை பெரும் துயரத்தில் ஆழ்தியது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பம் இந்த இழப்பில் இருந்து […]
சம்பளமே வாங்காமல் குறும்படத்தில் நடித்த பாடகர் வேல் முருகன்
சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன். இதைத்தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது குரல் பங்களிப்பையும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தில் இவர் பாடிய ‘கத்தரி பூவழகி…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களிலும் நாட்டுப்புற மேடைகளிலும் […]