அழகான, அமைதியான, ஆழமான நண்பனாக நடித்த”ஒரு கனவு போல” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார்,சௌந்தரராஜா. “அபிமன்யு” படத்தில் புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார், சௌந்தரராஜா.இதற்காக மிகுந்த சிரத்தை எடுத்த சௌந்தரராஜா, காக்கி உடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார். அபிமன்யுபடத்தின் தயாரிப்பு முன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் இப்படி முன்னோட்ட காட்சிகளைவெளியிடுவது வழக்கம். ஆனால், காவல்துறை கதை என்பதால், ஒரு காவல்துறை அதிகாரி வெளியிட வேண்டும் என்று விரும்பினர்படக்குழுவினர். […]
பிக் பாஸ் ஓவியா நடித்து வெளிவரும் முதல் படம் போலீஸ் ராஜ்யம்
அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார். களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னி ஆனஓவியா போலீஸ் ராஜ்யம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இயற்கை வளம் கொஞ்சும் கிராமத்தில் அப்பா அம்மா குழந்தைகள் என […]
மணிரத்னத்தின் இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம்
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17ஆவது தயாரிப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் இயக்கம்: மணிரத்னம், இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
இன்றைய ராசி பலன்கள் – 16.9.2017
16.9.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 31ம்தேதி. கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி மாலை 4.48 மணி வரைப் பின் துவாதசி திதி. பூசம் நட்சத்திரம் பின்னிரவு 2.01 மணி வரைப் பின் ஆயில்யம் நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 2.01 மணி வரைப் பின் மரண யோகம். ராகுகாலம் காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்ல நேரம்- […]
துப்பறிவாளனுடன் வெளியான ‘மாணிக்’ படத்தின் பஸ்ட் லுக்
சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இதில் ஹீரோயினாக ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் நடித்துள்ளார். இரண்டாம் ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மார்டின், இயக்கிய பல குறும்படங்கள் பல்வேறு விருது போட்டியில் பங்கேற்றதுடன், கலைஞர் டிவி-ன் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்று டைடிலையும் வென்றுள்ளது. மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் […]
பைரசியை எதிர்த்து ”ஹீரோ டாக்கீஸ்”நடத்தும் 24மணி நேர இடைவிடாத நேரலை பிரச்சாரம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பெரும் சேவை செய்யும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவையான ”ஹீரோ டாக்கீஸ்”, ‘ஷூட் தி பைரேட்ஸ்’ என்ற 24 மணி நேரம் இடை விடாத, பைரஸிக்கு எதிரான பிரச்சாரத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி காலை பதினோரு மணிக்கு பிரசாத் லேபிள் தொடங்கவுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பிரச்சாரத்தில் தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல்கள், விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் ஆகியவை சினிமா பிரபலங்களோடும், பிரபலங்கள் தலைமையிலும் நடத்தப்பவுள்ளது. இந்த ”ஷூட் தி […]
சிவா மனசில புஷ்பா… திட்டமிட்டபடி ஷார்ப்பாக முடிந்தது படப்பிடிப்பு!
சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது. அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் […]
நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவர்கள் நீட்டை எப்படி எதிர்ப்பார்கள்..? ; டி.ராஜேந்தர் கேள்வி..!
சிம்புவின் ‘சரஸுடு’ பட ரிலீஸ் வேளைகளில் ஆந்திரா, தமிழ்நாடு என பரபரப்பாக இருக்கிறார் டி.ராஜேந்தர்.. ஆம்.. பாண்டிராஜின் டைரக்சனில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த ‘இது நம்ம ஆளு’ படம் தான் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற பெயரில் வரும் செப்-15ல் ரிலீஸாக இருக்கிறது. அதற்காக தமிழ்ப்படத்தை அப்படியே டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் என நினைத்துவிடவேண்டாம். இந்தப்படம் உருவாகும்போதே தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகி வந்தது.. இங்கே தமிழில் சூரி நடித்த 40 நிமிட […]
எந்த வித தயக்கமுமின்றி ‘கருப்பன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்
ஒரு படத்தை சினிமா ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்து பார்ப்பதில் , எந்த மனநிலையில், எதிர்பார்ப்புடன் பார்க்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்வதில் அப்படத்தின் சென்சார் சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண் ரசிகர்கள் பெருகிக்கொண்டே வரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. தங்களது படங்களின் சென்சார் சான்றிதழ்களுக்கு என்றுமே முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களுடைய நிறுவனம் ஸ்ரீ சாய் ராம் creations விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக […]
இளம் இசையமைப்பாளரின் மியூசிக் ஆல்பத்தை வெளியிடும் அனிருத்
இசையமைப்பாளர் பியான் சரோ இசையமைக்க, சக்தி ஸ்ரீ, சுசித் சுரேசன் குரலில் உருவாகியிருக்கும் பாடல் “காதல் நீயே”, இதை ராக் ஸ்டார் அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 12 இன்று மாலை வெளியிடுகிறார், இதில் ஜெகதீஸ் மற்றும் புனிதா கார்த்திக் நடிக்கபாடல் வரிகளையும் ஜெகதீஸ் எழுதி பாடலாசிரியராகவும் அறிமுகம் ஆகிறார், இவர் இதற்கு முன் பியான் சரோ இசையில் வெளியான “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” படத்தில் நாயகனாவர். “காதல் நீயே” ஆலபத்திற்கு ஒளிப்பதிவு […]