Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: News

படத்திற்காக மொட்டை அடித்தேன் – பியா பாஜ்பாய்

எந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். சமீபத்தில் இயக்குனர் A R முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அணுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில், ”இந்த படமும் இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் […]

⁠⁠⁠⁠⁠மாணவி அனிதாவின் மரணம் இந்த சமூகத்தின் மீது அச்சத்தை தருகிறது – பா. இரஞ்சித்.

நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களாலும் நீலம் அறக்கட்டளையாலும் சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சுசீந்திரன், கரு.பழனியப்பன், “உறியடி” விஜயகுமார்,மகிழ்திருமேனி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மோகன் ராஜா, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சீனுராமசாமி, மிஷ்கின், ராஜுமுருகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கலையரசன், தினேஷ், ஜீவி பிரகாஷ், காளி வெங்கட், லிங்கேஷ், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். எழுத்தாளர்கள் […]

ஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ ; தொடங்கிவைத்தார் பாரதிராஜா..!

தமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம்.. இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, […]

“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது” ; கார்கில் விழாவில் குமுறிய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார். “கார்கில் என்றாலே கார்கில் போர் தான் நினைவுக்கு வரும்.. காதலும் அப்படி ஒரு போர் மாதிரித்தான் அதனால் தான் கார்கில் என டைட்டில் வைத்துள்ளோம்.. […]

நவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..!

லிப்ரா குறும்பட போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள் பட்டியல்! நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் […]

ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்? – பார்த்திபன்

அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் … அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே. வாழவே துவங்காத ஒரு இளம் பெண் தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம்? அதில் NEET தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்கவேண்டும். அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஏழைகளின் […]

அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் – விஷால் ஆவேசம்

தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன். அனிதா தான் பாதிக்கப்பட்டது போல பிற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீதிமன்ற படிகளில் ஏறி போராடியவர். நேற்று ஒரு வார இதழில் அனிதா பற்றி எழுதியிருந்ததை படித்து மிகுந்த பெருமைப்பட்டவனை இன்று வேதனைக்குள்ளாக்கி விட்டாள் அனிதா. 196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும் கூட அனிதா மருத்துவ படிப்புக்கு தகுதியடையவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டு […]

விஜய் சேதுபதியின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற கதை இருக்கிறது – புரியாத புதிர் இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. ரெபெல் ஸ்டுடியோ உடன் இணைந்து ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் ஜே சதீஷ்குமார் படத்தை தயாரித்திருக்கிறார். பல தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர் படக்குழுவினர். இயக்குனர் ராம் சாரிடம் உதவியாளராக பணி புரிந்தேன். 2009ல் வாட்ஸாப் […]

செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாகும் சர்வர் சுந்தரம்

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது, ‘சர்வர் சுந்தரம்’ வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ‘சர்வர்’ கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடை விடா சிரிப்பு வெள்ளமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? ; மிரளும் கஞ்சா கருப்பு..!

இன்று எத்தனை நகைச்சுவை நடிகர்கள் புதிது புதிதாக வந்தாலும் கூட நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம். கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் […]

Back To Top
CLOSE
CLOSE