இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் தான் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில் நடிக்க அழைப்பு. விவேகம் படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே […]
போராடும் விவசாயிகளுடன் தலைநகரில் சுதந்திர தினத்தை கொண்டாடிய அபிசரவணன்..!
நம்நாடு சுதந்திரம் பெற்று, 70வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதே வேளையில், தங்கள் வாழ்க்கையில் ஒரு விடியலை தேடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தலைநகர் டில்லியில் சாகும் வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள் நம் தமிழக விவசாயிகள். அரை நிர்வாண கோலத்தில் மத்திய அரசின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் விதமாக இந்த போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர் விவசாயிகள். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி டில்லியில் போராட்டத்தில் இருந்த விவசாயிகளை, […]
தனது வழக்கறிஞர் மூலம் அறிவிப்பை வெளியிட்ட அஜித்குமார்
சினிமாவை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் – அன்புமணி ராமதாஸ்
பதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் ‘எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’. ஒரு வயலின் இசைக்கலைஞனை பற்றிய இந்த குறும்படத்தின் சிறப்பு காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்குறும்படத்தை முன்பே பிரத்யேகமாக பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். தான் உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி திரைப்படங்களை இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் […]
சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது
கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் JPR இயக்கும் படம் சென்னையில் ஒரு நாள் – 2. சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், நெப்போலியன், சுஹாசினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் ஒரு பாடலை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். துருவங்கள் 16 படத்தின் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவான ‘நரம்புகள் புடைக்குதே’ எனும் பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் சரத்குமார் பாடியுள்ளனர்.
இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்றேன் – தனுஷ்
கலைப்புலி எஸ் தானு அவர்களின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2. வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து […]
ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு கரம் சேருங்கள்; ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கமல்!
நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையை தொடங்கி வைத்த உலக நாயகன் கமலஹாசன் மற்றும் Palam கல்யாணசுந்தரம் மற்றும் அதன் முதல் நிகழ்ச்சியான கின்னஸ் சாதனைக்காக நடைபெற உள்ள ‘நானும் ஒரு விவசாயி’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள்! “விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்கிற” நம்மாழ்வர்” கருத்துகளை பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தையின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து […]
சிலாக்கி டும்மா டான்ஸ் விஜய் சாரின் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம் – நடன இயக்குநர் சிவ ராக் சங்கர்
“ஹலோ நான் பேய் பேசுறேன்” படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலை பயணத்தை துவங்கியவர் மாஸ்டர் சிவ ராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற ” சிலாக்கி டும்மா “என்ற பாடலுக்கு ” டெத் குத்து ” என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அந்த நடன அசைவுகள் மிகவும் பிடிக்கும். ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் அனைத்து பாடலுக்கும் இவர் தான் […]
நடிகர் அல்வா வாசுவிற்கு உதவும் நடிகர் சங்கம்
நடிகர் அல்வா வாசு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் சீறிய முயற்சியால் நடிகர் சங்கத்தில் இருந்து 20000 ரூபாயை உடனடி செலவுக்காக அனைவரின் ஒப்புதல் வாங்கி அவருடைய குடும்பத்துக்கு அளிக்கப்பட்டது. அவருடைய மனைவியின் வங்கி கணக்குக்கு அனைவரும் பணம் அனுப்புவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. நடிகர் சங்க பொதுச்செயலாளரும், பொருளாளரும் தனிப்பட்ட முறையில் நிதி உதவி வழங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ராம் தன் மனதில் வைத்திருந்தது அப்போதுதான் தெரிந்தது – அழகம் பெருமாள்
எந்த ஒரு படத்திற்கும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற அதன் துணை கதாபாத்திரங்களின் பலமும் அந்த பாத்திரங்களை திறன்பட கையாளும் நடிகர்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. சமீபத்தில் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றுள்ள ‘தரமணி’ படத்தில் தோன்றிய கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களால் பேசப்படுவையாகவும் கொண்டாடப்படுவாயாகவும் அமைந்துள்ளது. அதிலும் நடிகர் அழகம் பெருமாள் நடித்துள்ள ரயில்வே போலீஸ் ‘பர்னபாஸ்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே சிறந்த ஆதரவை பெற்றுள்ளது. இதற்கு இந்த கதாபாத்திரம் அமைப்பும் இவரது யதார்த்த நடிப்பும் காரணம் என […]