பிக்பாஸ் ஷாரிக் ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் நேற்று இந்த நேரம்
கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் […]
சிம்புதேவனின் புதிய பான்-இந்தியா படம் ‘போட்’ 5 மொழிகளில் வெளியாகிறது
சிம்புதேவனின் புதிய பான்-இந்தியா படம் ‘போட்’ 5 மொழிகளில் வெளியாகிறது மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ்’ பிரபா பிரேம்குமார் பிரமாண்ட தயாரிப்பில் யோகி பாபு, கௌரி ஜி கிஷன் நடிப்பில் முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘போட்’ 5 மொழிகளில் வெளியாகிறதுவித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் சிம்புதேவன். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’; விஜய், ஶ்ரீ தேவி, சுதீப் […]
விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது “குய்கோ”
ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது !!
‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளையும் வெற்றியும் பெற்ற ‘லவ்’ திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு ‘கொலைச்சேவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரையும் இயக்குநர் பா ரஞ்சித் இன்று வெளியிட்டார். அறிமுக இயக்குநர் வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதைநாயகனாக நடிக்க, யூடியூப் குறும்படங்கள் புகழ் தீபா பாலு நாயகியாக திரையுலகில் […]
விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. […]
விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர்.இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குநராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர். சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், […]
‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: […]
ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. ஸ்கிரீன் சீன் மீடியா […]