ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’. சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார். கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்கம், ஒளிப்பதிவு – N.T.நந்தாகலை – ஆரோக்யராஜ்புரொடக்ஷன் எக்ஸிகுயுடிவ் – KKS ராஜாபுரொடக்ஷன் மேனேஜர் – […]
சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்
‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார் தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார். முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார். சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும். இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”. தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார். ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது
இனியா – கார்த்தீஸ்வரன் நடிக்கும் ‘எர்ரர்’
‘திலகா ஆர்ட்ஸ்’ சார்பாக எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் ‘Error’ படத்தை அறிமுக இயக்குனர் ஜி. பி. கார்த்திக் ராஜா இயக்குகிறார். இவர் தொலைக்காட்சிகளில் விஷ்வல் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.’பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் எடிட்டராகவும் பணியாற்றினார். நாயகனாக ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்பட நாயகன் கார்த்தீஸ்வரன் நடிக்கிறார். நாயகியாக இனியா நடிக்கிறார். இப்படத்திற்கு இசை பிரேம்ஜி அமரன். ஒளிப்பதிவு விவேக். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.
ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் 75 வது சுதந்திர தின பாடல் “பெருங்காற்றே”
இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே […]
‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவு!
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன். ‘மைம்’ கோபி மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு […]
17 சர்வதேச விருதுகளை குவித்த “ஒற்றைப் பனைமரம்” விரைவில் வெளியாகும்
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது. சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் […]
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’
வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில்அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது ‘தேஜாவு’ (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ‘தேஜாவு’ படத்தினை […]
காதல் ததும்பும் ஆல்பம், ‘ஓரு வினா, ஓரு விடை’
AL.Raja இயக்கத்தில் மாற்று திறமைசாலி ஶ்ரீஹரி நடித்த “ஒரு வினா ஒரு விடை” தனிப்பாடலைஇயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார் வெளியிடஇசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா,இயக்குனர்கள் சண்முகசுந்தரம்,எழில்பெற்றுக்கொண்டனர். காதல் ததும்பும் ஆல்பம், ‘ஓரு வினா, ஓரு விடை’ ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’, ‘அக்கி ரவ்வா’ (தெலுங்கு) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ எல் ராஜா, தனது நண்பர்களுக்காக ‘ஓரு வினா, ஓரு விடை’ என்ற ஆல்பத்தை தற்போது இயக்கியுள்ளார். ‘சின்ன மாப்பிள்ளை’, ‘மகாநதி’, ‘வியட்நாம் காலனி’, ‘செங்கோட்டை’ மற்றும் ‘கண்ணுபட […]
ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது
பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டங்களைத் […]
133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்
133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்! கடந்த சில வருடங்களாக எல்லா நடன மேடைகளிலும் தவறாமல் இந்த இரண்டு பாடல்கள் இடம்பெற்று வருகிறது. ஒன்று ‘ஹரஹர மகாதேவகி’ பாடல், மற்றொன்று ‘ஹே சின்ன மச்சான்’ பாடல். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் தான் இந்த இரண்டு பாடல்களுக்கும் இசையமைப்பாளர். இவர் இசையமைத்த இந்த இரண்டு பாடல்களும் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குநர்களான பிரபுதேவாவையும் லாரன்ஸையும் அசுர […]