ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது தான் கதையின் முக்கிய அம்சங்களை அதிக தாக்கத்துடன் சொல்கிறது. சில நேரங்களில், அதுவே படத்துக்கான ஈர்ப்பின் முக்கிய ஆதாரமாக கூட மாறுகிறது. அதுவே படம் எதை பற்றியது என்பதை அறியும் ஆர்வத்தையும், கதையுடன் அதன் பொருத்தத்தையும் அறிந்து கொள்ள தூண்டுகிறது. சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கும் “நா நா” படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகுமாருடன் சரத்குமார் […]
ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘ரீல்’
ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரீல்’. சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. துபாயில் பார் டான்சராக இருக்கும் ஒருவர் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த கதையை எழுதினோம். […]
முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி
நடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் […]
களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்
தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி […]
தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை […]
செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை
நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார். தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து […]
அருண் விஜய், கார்த்திக் நரேன், லைகா ப்ரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவாகும் “மாஃபியா”
தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும், எல்லைக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் இது ஒரு அற்புதமான தருணம். மிக திறமையான இரண்டு ஆளுமைகள் இணைவதை பற்றிய செய்தி தான் இது. ஆம், லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க “மாஃபியா” படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தூண்டியுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அது விடாமுயற்சி, தூண்டுதல் மற்றும் துல்லியத்தன்மை பற்றியது. குறிப்பாக, லைகா […]
தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள “தண்ணி வண்டி”
எந்த ஒரு திரைப்படம் வணிகக் கூறுகளுடன் தொகுக்கப்பட்ட எளிய மற்றும் தனித்துவமான கருப்பொருளை கொண்டிருக்கிறதோ, அது எப்போதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. இதை பல படங்கள் நிரூபித்துள்ளன. தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள தண்ணி வண்டி இந்த அம்சங்களை மிகச் சிறப்பாக விளக்குகிறது என்பது தெளிவாகிறது. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் […]
‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிக்கொடுத்த ராக்ஸ்டார் அனிருத்
அனிருத் எந்த இசை வகைகளுக்கும் ஒரு ஒத்த குறியீடாக மாறுகிறார். இது அவர் இசையமைக்கும் வெற்றிப் பாடல்களை பற்றி மட்டுமல்ல, அவரது மாயாஜாலக் குரல், மெல்லிய நனைவில் உங்களை ஊற வைக்கும் அதே நேரத்தில், அவரது மேற்கத்திய இசை பாடல்கள் இடைவிடாமல் உங்கள் கால்களை பார்ட்டி மனநிலைக்கு கொண்டு சென்று ஆட வைக்கும். தற்போது ஜிப்ரான் இசையமைத்த “சிக்ஸர்” படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது […]
நரைமுடியை தொடர்ந்து குறட்டை விடும் பிரச்சனைக்கும் புதிய மருந்து கண்டுபிடித்த நடிகர் ஆர்கே
எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள […]