எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள […]
கபில் ஆக மாறும் ரன்வீர் !!
ரன்வீர் சிங் ஒரு திறமையான நடிகர், அவர் ‘பத்மாவத்’, ‘கல்லி பாய்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ மற்றும் ‘ராம் லீலா’ போன்ற வெற்றி படங்களை தந்தவர், இவர் சமீபத்திய காலங்களில் மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது தோற்றங்கள் மற்றும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அளவுக்கு அமைந்திருக்கும். இவரது கதாபாத்திரம் இவர் நடித்த மற்ற படங்களை விட மாறுபட்டவையாக அமைந்திருக்கும், ஆகையால் தான் இவரால் அடுத்தடுத்து வெற்றி படங்களை தர முடிந்தது. 83′ படத்தில் […]
முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை” “
ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “ இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – M.P.சிவகுமார் இசை – பாலகணேஷ் எடிட்டிங் – G.V.சோழன் விளம்பர வடிவமைப்பு – அயனன் தயாரிப்பு – ஜெமினி ராகவா இணை தயாரிப்பு – க.முருகானந்தம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன் படம் பற்றி […]
தனது இசை பயணத்தை தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்
இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி […]
சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’
‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில், திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். முண்டாசுபட்டி மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை – இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் பி கார்த்திக் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார், அதன் இரண்டாம் பாகத்திற்கு கதை, திரைகதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார். ‘சூது […]
பத்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் குறும்படம் தயாரித்து நடிக்கும் ஆரி..!
சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் இந்த ‘சுந்தர தாய்மொழி’ குறும்படம் சிறப்பு காட்சி யாக திரையிடப்படவுள்ளது. மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவையும் நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து உலக குறும்பட விழாக்களுக்கு இக்குறும்படத்தை எடுத்து செல்ல உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாவது உலக தமிழ் மாநாடு வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் 32வது ஆண்டுடன் இணைந்து சிக்காகோவில் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் முத்தாய்பாக தமிழின் தொன்மையை தலைமுறை அறிந்திடும் […]
ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு – விக்ராந்த்
எம்10 புரொடக்ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் […]
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் ‘சர்ப்ரைஸ்’ அவதாரம்
“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் நேர்மறையான வரவேற்பு ஒட்டுமொத்த குழுவையும் மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூபர் (அ) கலைஞர்களும் தங்களது திரை இருப்பு மூலம் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் ஒரு ஆச்சரியமான ஷோஸ்டாப்பராக மாறியிருக்கிறது. அவர் வேறு யாருமல்ல நடிகர் விவேக் பிரசன்னா. மிகக்குறுகிய காலத்தில் நகைச்சுவை, வில்லத்தனம் மற்றும் குணச்சித்திர வேடம் என தனது பன்முக கதாபாத்திரங்கள் மூலம் […]
லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. […]
சோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்
சிட்டி முதல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பாடகர் அந்தோனி தாசன். அவரின் சினிமாப் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களும் எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப் பட்டு வருகின்றன. சொடக்குப் போடும் நேரத்தில் தன் கிராமியக் குரலால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தக் கூடிய அந்தோனி தாசன் சோனி மியூசிக் நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்டாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தோனி தாசனின் நாட்டுப்புறப் பாடல்களை சோனி நிறுவனம் தரமான முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்து வருகிறது. மேலும் தற்போது ஒரு புது முயற்சியை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக […]