பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, அனாமிகா பிக்சர்ஸ் லோகோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு, அருள்பதி, நடிகர் சமுத்திரகனி, இயக்குனர் விஜய்மில்டன், அறிவழகன், தாமிரா, நடிகர் இமான் அண்ணாச்சி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், விஜய் ஆதிராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
இனி தமிழ் திரைப்படங்ளை இணையத்தளங்களில் வெளியாகாமல் பாதுகாக்க புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது, ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனம்.
“போலியான இணையத்தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்….” என்று ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறினார் இயக்குநர் வெங்கட் பிரபு சினிமா – ஒரு கலை உலகம். அந்த கலை உலகத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது….வித்தியாசமான கதைக்களங்களை கொண்டு தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கி வரும் பல உன்னத படைப்பாளிகளே அதற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இன்றைய இணையத்தள உலகில் […]
கிருஷ்ணா நடித்திருக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசை பணிகளை நிறைவு செய்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா..
கிருஷ்ணா நடித்திருக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசை பணிகளை நிறைவு செய்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா திரைப்படங்கள் உருவான காலம் முதல் இன்று வரை அந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்து வருவது இசை தான்….. காதல், அதிரடி, நகைச்சுவை என எந்த காட்சிகளாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது இசை என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்…..அந்த இசையே யுவன்ஷங்கர் ராஜாவின் விரல்களில் இருந்தும், குரலிலும் இருந்தும் தோன்றினால், நிச்சயமாக இசை பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே […]
விக்ரம் நடிக்கும் புதிய படம் விஜய் சந்தர் இயக்குகிறார்..
விக்ரம் நடிக்கும் புதிய படம் விஜய் சந்தர் இயக்குகிறார் SFF என்ற பட நிறுவனம் தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும். மாறுபட்ட கதாப்பாத்திரங்களில், வித்தியாசமான கதை களங்களில் நடிப்பவர் விக்ரம். இந்த கதைக்களமும் அப்படி மாறுப்பட்ட […]
விருது மேல் விருதுகள் இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்!
விருது மேல் விருதுகள் இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்! ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படம் அனைவரின் பேராதரவுடன் வணிக நீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் விழா (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு […]
‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் மூலமாக தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார் நடிகர் ‘நிதின்’ சத்யா..
‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் மூலமாக தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார் நடிகர் ‘நிதின்’ சத்யா ‘வசூல் ராஜா MBBS’ திரைப்படத்தில் அறிமுகமாகி, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து, ‘சத்தம் போடாதே’ படத்தின் சைக்கோ வில்லனாக அனைவரையும் மிரட்டி, இயக்குநர் கார்த்திக் ராஜுவின் ‘திருடன் போலீஸ்’ திரைப்படம் மூலம் எல்லா தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றவர், நடிகர் நிதின் சத்யா. இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனோடு இணைந்து, ‘ஃப்ரைடே மாஜிக் […]
அரசியல் கிரைம் திரில்லர் “ பழைய வண்ணாரப்பேட்டை “
அரசியல் கிரைம் திரில்லர் “ பழைய வண்ணாரப்பேட்டை “ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ் வெளியிடும் “ பழைய வண்ணாரப்பேட்டை “ இந்த படத்தில் பிரஜன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். மற்றும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கானாபாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – பாருக் / இசை – ஜூபின் / […]
YGM’s Kasethan Kadavulada Successful 50th Grand Stage Show
ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை
ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி ( தர்மதுரை ) சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி ( தர்மதுரை […]
பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா
இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாயா. அடிப்படையில் உடற்பயிற்சி வல்லுனரான (Gymnast) இவர், இந்திய அளவில் 6ம் இடத்தை பிடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். மேலும் பாடகி, மேடை கலைஞர், க்ளௌன் (Clown) மருத்துவர், சிலம்பாட்ட கலைஞர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார். மாயா தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்திலும், இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் […]