Semma Botha Aagathey Audio Launch at Radio Mirchi Photos
படைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்
இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான “லோக்கல் சரக்கா பாரின் சரக்கா… ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா… ” எனத் தொடங்கும் பாடலை […]
தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுதும் புதிய படம்
ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார். “எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது […]
இது தான் என் முதல் நேரடி தமிழ்ப்படம் – நிவின் பாலி
எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பிரமாண்டமாக வெளியிடும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவை ஜிகே ரெட்டி, நிவின் பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கௌதம் ராமச்சந்திரன், ஆனந்த் பையனூர், […]
‘கணவனை வில்லன் ஆக்கிய ‘தொட்ரா’ தயாரிப்பாளர்..!
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்கத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.. மிக முக்கியமான கதாபாத்திரத்தில் […]
பரபரப்பு பற்றிக் கொள்ளும் கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி”
“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார். விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]
எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று ‘அறம்’ – ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்
எந்த ஒரு தரமான கதையையும் மேலும் மெருகேத்தி அதன் தீவிரத்தை கூட்டுவதற்கு அக்கதையை படமாக்கும் விதமும் , உபயோகப்படுத்தப்படும் ஒளிப்பதிவு நுட்பங்களும் முக்கியமான பங்கு வகிக்கும். மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் என எல்லா தரப்பினரிடையும் பேராதரவு பெற்றுள்ள ‘அறம்’ படத்தின் எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் பாராட்டுக்களை பெற்று வருகின்றன. இப்படத்தில் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவை பாராட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். ‘அறம்’ குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் […]
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் அமல்கம் இசை ஆல்பத்தை வெளியிட்ட இசைப்புயல் ஏஆர் ரகுமான்
கர்நாடக இசை மாமேதை, பத்மவிபூஷன் செவாலியர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அமல்கம்’ என்ற ஃபியூஷன் இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். நவீன, சமகால இசை பாணியில் அவரே இசை அமைத்து பாடிய இந்த ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருந்தன, அவற்றை சரிகம நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தற்செயலாக இதுவே மாமேதை வக்கேயகரா அவர்கள் கடைசியாக ரெக்கார்டு செய்த ஆல்பமாகவும் அமைந்துள்ளது. ஷ்யாம் ரவிஷங்கர், நிகில் என இரண்டு இளம் இசைக் கலைஞர்கள் […]
என் உழைப்பு என்னை நிச்சயம் உயர்த்தும் – பிண்ணனி பாடகி நமீதா பாபு
ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது எந்த ஒரு இளம் பிண்ணனி பாடகருக்கு சவாலான காரியமே. தமிழ் சினிமாவின் அடுத்த சிறந்த பாடகியாக வேண்டும் என்ற கனவோடும் , அதற்கான திறமையோடும் இருக்கும் நமீதா பாபுவின் பிண்ணனி பாடகி வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. ‘சண்டி வீரன் ‘ படத்தில் ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடல் மூலம் ஹிட் கொடுத்து தனது பயணத்தை தொடங்கியவர் நமீதா பாபு. […]