ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் ‘Auraa Cinemas’ நிறுவனம் […]
இன்றைய ராசி பலன்கள் – 7.12.2017
7.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 21ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி மதியம் 12.53 மணி வரை பின் பஞ்சமி திதி. பூசம் நட்சத்திரம் பின்னிரவு 1.49 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 1.49 மணி வரை சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 […]
‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய விஜய் டிவி
ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் […]
நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் – இயக்குநர் கவுதம் ராமசந்திரன்
நிலையாக ,உறுதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படம், நிவின் பாலி, ‘நட்டி’ நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி நடிப்பில், கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ரிச்சி’. இது நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமாகும். இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. ‘விக்ரம் வேதா’, ‘அவள்’, ‘அறம்’ போன்ற அசத்தலான படங்களை பெரிய அளவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி கண்ட ‘Trident […]
என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்
ஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில அம்சங்களை சேர்த்து இசையமைப்பது மட்டுமல்ல, அதற்கு உயிர் கொடுப்பதும் தான். திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. அவரது இசையின் மூலமான கதை சொல்லலில் படத்துக்கு உயிர் கொடுத்து, ரசிகர்களுக்கு நல்ல, மறக்க முடியாத அனுபவத்தை […]
சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் !!!
ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என்ற தலைப்பை கொண்ட படத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘பரோல்’ என்ற வார்த்தையை விரும்பாத சிலர் […]
தமிழ் ரசிகர்களை குளிர்விக்கவரும் சன்னி லியோன்
உலகம் முழுவதும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற பிரபலம் தான் சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ச்சியாக பல இந்தி படங்களில் நடித்து வந்த அவர், முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கமெர்சியல் பட இயக்குனர் வி சி வடிவுடையான் இந்த படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதை தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்த […]
ரஜினி சார் எல்லா ரசிகர்களையும் மதித்து, பழகக் கூடியவர் – கபாலி செல்வா
ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கபாலி செல்வா மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். வா மச்சானே, டசக்கு டசக்கு போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து இந்த 12 12 1950 படத்தில் 3 பாடல்களை எழுதியிருக்கிறேன். செல்வா சார் […]
அனிருத் இல்லைன்னா சிவகார்த்திகேயன் இல்லை – சிவகார்த்திகேயன்
24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை ஆர் டி ராஜா செய்து வருகிறார். ஒரு பிரமாண்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் சாப்பிடுவது சாதாரண சுந்தரி அக்கா கடையில் தான். […]