திரைப்பட தயாரிப்பாளர்கள் வருமானம் ஈட்ட மேலும் ஒரு வழி பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி
பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும்பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media) சனிக்கிழமை மாலை சென்னை ஜிஆர்டி கிராண்டில் நடத்திய ஊடக தொழில்நுட்ப மாநாட்டில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்பம், வருவாய் மேம்பாடு மற்றும் புதுமையான தொழில்முனைவு ஆகியவை திரைப்படத் துறையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன என்பதை ஆலோசிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக ‘எதிர்கால மீடியா தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் […]
“இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை சொல்லும் படம்.
Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் […]
இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா
‘தேஜாவு’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, பட தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ‘கிடாரி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையை பதித்து இசை ரசிகர்களை […]
ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!
Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் […]
” பகாசூரன் “ சர்ச்சைகள் வரும் மக்களுக்கு புரியும் ! இயக்குனர் மோகன்.G
திரௌபதி ருத்ர தாண்டவம் திரைப்படம் சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதை போலவே பகாசூரனும் சேலம், ஆற்காடு, பாண்டிச்சேரி, ஆகிய பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட ஒரு கதை. இந்த திரைப்படம் தற்போது சமூகத்தில் மசாஜ் செண்டர்கள் என்ற பெயரில் நடக்கும் அநியாயங்கள், ஆன்லைன் பிராஸ்டியூஷன் virtual பிராஸ்டியூஷன் ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்காக, பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை இது. இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் […]
அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்.
பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது. “கல்கி:பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி எழுதியுள்ள அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மணிரத்னம் இன்று (13 பிப்ரவரி 2023) வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதிகளை அமரர் […]
“காதல் கண்டிசன்ஸ் அப்ளை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் தயாரிப்பாளர் நிதின் சத்யா பேசியதாவது.., “இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் […]
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு
அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொடரின் நாயகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார். ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’, ‘வதந்தி – தி ஃபேபுள் ஆஃப் வெலோனி’ ஆகிய அசல் தொடர்களை அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் அமேசான் பிரைம் வீடியோ, அடுத்ததாக ‘மக்கள் செல்வன்’ விஜய் […]
பொன்குமரன் இயக்கும் “மஹால்” திகில் படத்தில் நடிக்கிறார் ஜாவித் கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை நடிகர் ஜாவித் கான் விமரிசையாக கொண்டாடினார். அமிதாப் பச்சனுடனான தன்னுடைய நட்பை பற்றி பகிர்ந்துகொண்ட ஜாவித் கான் கூறுகையில்: அமிதாப் பச்சன் அவர்களை பற்றிய எனது ஆரம்பகால நினைவு 80களில் இருந்து துவங்கும். ‘ஒன்லி விமல்’ பிரச்சாரம் மூலம் நான் நாட்டின் தலைசிறந்த மாடலாக இருந்தபோதிலும், புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன். ஒரு நாள் அதிகாலையில் அப்ராதி […]
ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!!
ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் […]