தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார். தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து கூறியதாவது : மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறுகொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் தமிழாற்றுப்படை. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். ஆற்றுப்படை […]