சென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ் நிவேதா பெத்துராஜ் அசல் அக்மார்க் மதுரைக்கார தமிழ்பொண்ணு. பிறந்தது மதுரை வளர்ந்ததும் படித்ததும் துபாயில். இருப்பினும் தமிழ் கலாச்சாரமும் அழகும் குறையவில்லை. மிஸ் இந்தியா துபாய் ‘பட்டம்’ வென்ற நிவேதாவின் புகைப்படங்கள் ‘ஒரு நாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் கண்ணில்படவே, அதுவே நிவேதாவின் சினிமா பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழியானது. சினிமா மீது மோகமிருந்தாலும் தான் சினிமாவில் நடிப்பேன், நடிகையாவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது என்கிறார் புன்னகையுடன். “டைரக்டர் […]