நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம். ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. “நானும் […]