முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் வெகு சுவாரசியமானது. இதுவரை […]