ஒரு படம் சாதாரணமாக அடையும் மிகப்பெரிய வெற்றியை விட, தடைகளை தாண்டி அடையும் ஒவ்வொரு வெற்றியும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். அப்படி பல தடைகளை தாண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார் கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார். […]