காலங்கள் மாறிக்கொண்டிருகிறது. திரையிலும் சரி, வாழ்விலும் சரி, பெண்களுக்குரிய அங்கீகாரமறுப்பு என்பது கடந்த காலமாகிவிட்டது. இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தான் எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்களை மையமாகக் கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற இவ்வேளையில், ஒரு அதிரடி – மர்மம் – திரில்லர் கட்டமைப்பிலான பிரியதர்சினியின் இப்புதிய படைப்பு, ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர தூண்டியுள்ளது என்பது வரவேற்புக்குரியது. காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட […]