தமிழ்த்திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் மதன் கார்க்கி. இவரும், இவருடைய நண்பர் கௌந்தேயாவும் இணைந்து ‘டூப்பாடூ’(doopaadoo.com) என்னும் பாடல் தளத்தை வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்க உள்ளனர். சமீபத்தில், பிரபலங்கள் மற்றும் சமூகவலைத்தள வாசிகள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய இந்த டூப்பாடூ, இளம் இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஓரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். உலகெங்கும் இசைப் பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் […]