ஒவ்வொரு இயற்கைச் சீரழிவும் பல உயிர்களுக்கு முடிவுரை எழுதினாலும் சில உணர்ச்சிகரமான கதைகளுக்கு முன்னுரை எழுதவும் தவறுவதில்லை. தமிழ்நாடு சந்தித்த மாபெரும் இயற்கை சீற்றத்திலிருந்து ஒரு நெகிழ்ச்சியான கதையை இழைபிரித்து ‘இரண்டு மனம் வேண்டும்’என்கிற திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். குழந்தையை மையப்படுத்திய பாசப் போராட்டம்தான் கதை என்றாலும் காதல், நகைச்சுவையும் இயல்போடு கலந்த திரைக் கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. இப்படத்தை பிரதீப் சுந்தர் இயக்கியுள்ளார், இவர் மலையாளத்தில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றியவர். இது இவருக்கு முதல் படம். […]