தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். புதிய நிர்வாகம் பொறுப்பேற்றவுடன் நடிகர் சங்க நிலத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து மீண்டெடுத்தது. தற்போது தமிழகமெங்குமுள்ள உறுப்பினர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவம், கல்வி மற்றும் நல உதவிகளை வழங்கிட மாவட்டம் தோறும் ஆண், பெண் உறுப்பினர்களை தனியாக பிரித்தெடுத்து ‘குருத்தட்சணைத் திட்டம்’ என்ற பேரில் விபரங்களை சேகரித்து பதிவு செய்யப்பட்டது. அதனுடைய முதல் கட்டமாக மருத்துவ உதவிக்காக ஏ.சி.எஸ் மருத்துவ பல்கலை கழகம், […]